காலத்தால் பரீட்சிக்கப்பட்ட தேவனுடைய ஞாபகச் சின்னங்கள் TIME-TESTED MEMORIALS OF GOD பிரன்ஹாம் கூடாரம், ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா. 57-08-18 1. வேதாகமம் மூலமாக அதைச் சுற்றிப் பொதிந்து கொள்கிறோம், வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தையும், யாத்திராகமம் மற்றும் ஆதியாகம் புத்தகங்களையும் அந்தவிதமாகத்தான் நாம் எடுத்திருக்கிறோம். இப்பொழுது நான் அணில் வேட்டைக்காக வீட்டிற்கு வந்திருக்கிறேன். இது நேர்மையானது. அதற்கு இருப்பதெல்லாம் அவ்வளவு தான், அப்படியே நேர்மையாக இருப்பது. சகோதரன் ராய் அவர்களே, எப்போது நீர் போகிறீர்? (சகோதரன் ராய், "நாளைக்குப் போகிறேன்" என்று கூறுகிறார் - ஆசிரியர்.) நாளைக்கா போகிறீர்? சரி, எனவே வருடத்தின் இந்நேரத்தில் வீட்டிற்கு வருவதை நாங்கள் விரும்புகிறோம். எனவே, அது, நாங்கள் இளைப்பாறச் சென்றோம். 2. நான் உம்மைக் கண்டது முதற்கொண்டு 20 பவுண்டுகள் எடை குறைந்து விட்டேன். நான் இந்தக் கூட்டத்தை விட்டு புறப்பட்ட போது, எடை கண்டறியும் அளவுகோலில் நின்று பார்த்த போது, எனக்கு 165 பவுண்டுகள் எடை இருந்தது; திரும்பி வந்த பிறகு 145 பவுண்டுகள் எடை இருந்தது. ஆகையால் என்னுடைய உடைகள் கீழே விழுவது போன்று உணருகிறேன். எனவே நான் அதிக எடையை இழந்து விட்டேன். 3. இன்று ஏதோவொரு சீமாட்டி, வெளியே போய்க் கொண்டிருந்தார்கள், அவர்கள் அன்பான சகோதரி, அவர்கள், "சகோதரன் பிரன்ஹாமே, நானும் கூட எடையைக் குறைத்துக்கொள்ள முடியும்படி ஜெபித்துக் கொள்ளுங்கள்" என்றார்கள். (சகோதரன் பிரன்ஹாம் சிரிக்கிறார் - ஆசிரியர்.) 4. அவர்கள் சற்றே பலமானவர்களாக இருந்தார்கள், எனவே நான் அவர்களிடம், அப்படியே என்னைப் பின்தொடர்ந்து வந்து, மிகவும் கடினமாகப் பிரசங்கம் பண்ணுங்கள்" என்று கூறினேன். எனவே ஏறக்குறைய எனக்குத் தெரிந்ததெல்லாம் அவ்வளவு தான், அது நிச்சயமாகவே எடையைக் குறைக்கும். ஆனால் நாம் சீக்கிரத்தில் பிரச்சனைகளையும் சோதனைகளையும் கொண்டவர்களாய் எடை குறைந்து போவோம். 5. வயதாகிக் கொண்டிருப்பதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். இன்னும் இரண்டு வருடங்களில் எனக்கு 50 வயதாகப் போகிறது என்பது உங்களுக்குத் தெரியும். வியூ! பிராங்கி வெபர் அவர்கள் உள்ளே பிரவேசித்த போது, அந்த நேரம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அவர் என்னைக் காட்டிலும் இரண்டு வயது மூத்தவர். அவருக்கு 25 வயதான போது, அவருடைய பிறந்த நாள் காணிக்கையை இங்கே (கொடுத்தார்.) அப்போது நான் என்னுடைய கண்ணைச் சிமிட்டி விட்டு, "என்னே, பிராங்கி வெபருக்கு 25 வயதாகி விட்டது, நூறு வயதில் கால் பாகம் ஆகி விட்டது" என்று நினைத்தேன். இப்பொழுதோ நூறு வயதில் பாதியாகி விட்டது. அதற்கு அதிக காலம் பிடிக்காது, அப்படித்தானே? அப்படியே தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறோம். 6. நாம் நீண்ட காலம் தங்கியிருக்க மாட்டோம். இந்தக் காலையில் நம்முடைய அன்பு சகோதரன் மிகவும் குறிப்பிடத்தக்க அந்தச் செய்தியைக் கொண்டு வந்தார், நாம் எல்லாரும் அதைக் (கேட்டு) அனுபவித்தோம் என்ற நிச்சயமுடையவனாயிருக்கிறேன். அவர் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கும் போது, நான் அங்கே பின்னால் இருந்து கொண்டு எதையோ சிந்தித்துப் பார்க்க நேர்ந்தது, நான், "கர்த்தர் ஒருக்கால் அதனிமித்தமாக ஒரு வேதவாக்கியத்தை எனக்குக் கொடுக்கலாம்" என்று நினைத்துக் கொண்டேன். தேவனுடைய ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தையிலிருந்து சிறிது வாசிக்கும்படி நான் அவரைக் கொண்டிருந்தேன். மேலும் இப்பொழுது நான்... பேசுவதற்கு வெறுமனே ஒரு சில நிமிடங்கள் தான் உள்ளன. அதன்பிறகு நாம் வழக்கத்தின்படியே வியாதியஸ்தருக்காக ஜெபிக்கலாம். 7. புதன்கிழமை இரவு, வருகிற இந்த புதன் இரவில், கர்த்தர் அனுமதிப்பாரானால், அது சரியாக இருக்குமானால், நான் எபிரெயர் புத்தகத்திலிருந்து தொடங்க விரும்புகிறேன். ஒரு பாடத்திற்காக எபிரெயர் புத்தகத்தில் வாசிக்கத் தொடங்கலாம். அதன்பிறகு, ஒருக்கால், ஞாயிறு காலை அல்லது ஞாயிறு இரவு அதைத் தொடர்ந்து நடத்தலாம். அதன்பிறகு ஒருக்கால் அடுத்து வருகிற புதன் இரவு, அதை மறுபடியும் எடுத்து, அப்படியே அதைத் தொடர்ந்து வேதவாக்கியத்தில் சுற்றி பொதியலாம். 8. இந்தச் சபையில் நான் கவனித்த சில காரியங்கள் உண்டு, நான் கடந்து போகையில், நான் கொஞ்சம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், உங்களுக்குத் தெரியும், காரியங்கள் சற்று பலவீனமாக காணப்படுகிறது. நம்மால் அதை அங்கே எபிரெயரில் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். அது ஒரு - அது ஒரு மிக நல்ல அதிகாரம், வாசிப்பதற்கு மிகவும் நல்ல இடமாக இருக்கிறது. இப்பொழுது, சகோதரன் நெவில் அவர்கள்.... நான் போய்க் கொண்டிருந்தேன்..... அது என்னுடைய சிந்தையில் வருகிறது, கீழ்நிலைக்குப் போய்க் கொண்டிருப்பது. 9. நான் இங்கே புதிய ஏற்பாட்டை வைத்திருக்கிறேன், நான் காலின்ஸ் வேதாகமத்திலிருந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன், அது கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. நான்... எனக்கு ஏறக்குறைய 50 வயதாகி விட்ட பிறகு, மிகவும் அருமையாக அச்சிடப்பட்ட அதை வாசிப்பதற்கு, நான் அதை என்னிடமிருந்து மிகவும் தூரமாய் தள்ளி வைக்க வேண்டியிருக்கிறது; எப்படியும் அது மோசமான வெளிச்சம் தான். நான் வெளியே சூரிய வெளிச்சத்தில் போகும் போது, அப்பொழுதும் அதை வாசிக்கிறேன். ஆனால், வெளிச்சம் சற்று மங்கலாக இருக்கும் போது, நான் அதை தூரமாகத் தள்ள வேண்டியிருக்கிறது. நான் சீக்கிரத்தில் வாசிக்கத்தகுந்த சில மூக்குக்கண்ணாடிகளை அணியப் போகிறேன் என்று மருத்துவர் என்னிடம் கூறினார். நான் அவரிடம், "என்னுடைய கண்கள் மோசமாகி விட்டதா?" என்று கேட்டேன். 10. அவர் அவைகளைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு, அது பத்துக்கு பத்தாக உள்ளது, அது உச்ச நிலையோடு நன்றாகத்தான் உள்ளது. இருபதுக்கு இருபது என்பது இயல்பானது, பதினைந்துக்கு பதினைந்து என்பது சிறந்தது. பத்துக்கு பத்து என்பது அவரால் வாசிக்க முடிந்தது அவ்வளவு தான். இப்படியிருக்க அவர் விரும்பின எந்த இடத்தில் உள்ள தூரத்திலும் என்னால் வாசிக்க முடிந்தது. அவர் ஏதோவொன்றை வெளியே வைத்தார், நான் அதையும் வாசிக்கத் தொடங்கினேன். அவர் அருகில் கொண்டு வந்த போது, நான் தொடர்ந்து மெதுவாக மெதுவாக வாசித்துக் கொண்டிருந்தேன். ஏறக்குறைய இந்தவிதமான தூரத்தில் அது வந்த போது, நான் வாசிப்பதையே நிறுத்தி விட்டேன்.. அவர், ஓ, ஆமாம், நீர் நாற்பது வயதைக் கடந்து விட்டீர் என்றார். நான், "ஆமாம்" என்றேன். 11. அவர், "இயற்கையாகவே உம்முடைய கண்விழி தட்டையாக உள்ளது. இப்பொழுது, நீர் ஒரு நல்ல, நீண்ட ஜீவியத்தை உடையவராய் இருப்பீரென்றால், நீர் உமது இரண்டாவது பார்வையைப் பெற்றுக் கொள்வீர் என்று நம்புகிறேன். அப்பொழுது தான் உம்மால் மீண்டும் திரும்ப வாசிக்க முடியும்" என்றார். 12. ஆனால், அது மிகவும் தூரமாக இல்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன், உங்களுக்குத் தெரியும். சற்று பொறுத்துக்கொள்ளுங்கள். சகோதரன் டோனி அவர்களே, அது மோசமாக இருக்கிறது, இல்லையா? (சகோதரன் டோனி, இல்லை என்று கூறுகிறார் - ஆசி.) இல்லை, அது மோசமாக இல்லை. அது ஆசீர்வாதமான ஒரு காரியமாக உள்ளது. எனக்கு ஒருவிதத்தில் வயதாகிக் கொண்டிருக்கிறது, மற்றொரு விதத்தில் வாலிபனாயிருக்கிறேன், ஏனென்றால் நான் அந்த வாலிபமான, மரித்துப் போகாத, ஆசீர்வதிக்கப்பட்ட சரீரத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறேன், அங்கே, சகோதரனே, அங்கே எதுவுமே ஒருபோதும் தவறாக இருக்காது. நான் அந்த நேரத்துக்காகவே ஜீவித்துக் கொண்டிருக்கிறேன். அது அற்புதமாக இருக்கும். 13. இப்பொழுது, நாம் கடைசியாக நிறைவடையும்படியான வேதபாகத்தை வாசிப்பதற்கு முன்பாக, நாம் நம்முடைய தலைகளை வணங்குகையில், வெறுமனே அவரிடம் ஒரு வார்த்தை பேசுவோம். 14. சர்வவல்லமையுள்ள தேவனே, உமது ஜனங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றே நீர் நினைக்கிறீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். நாங்கள் திருப்தியற்றவர்களாக இருக்க வேண்டுமென்றோ, துக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்றோ நீர் கருதவில்லை, "மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்" என்று எழுதப்பட்டுள்ளது. உமது ஆசீர்வாதங்களை மகிழ்ச்சியோடு அனுபவிக்கவும், இந்த மகத்தான ஐக்கியத்தைக் கொண்டிருக்கவும் நாங்கள் விரும்புகிறோம். 15. உமது வார்த்தையை விசுவாசிப்பவர்களாக, நாங்கள் வார்த்தையைச் சுற்றிலும் ஐக்கியம் கொள்கிறோம். அதற்காகத் தான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். வெறுமனே ஒரு செய்தியைக் கேட்பதற்கல்ல, ஆனால் ஆராதிக்கவும், உம்மோடு கூட ஐக்கியம் கொள்ளவும் இங்கே வந்திருக்கிறோம். இப்பொழுது, கர்த்தாவே, நீர் எங்களை ஏமாற்றமடையச் செய்ய மாட்டீர். இந்த மணி வேளைகளில் நீர் எங்களை ஆசீர்வதிப்பீர் என்ற நிச்சயமுடையவனாயிருக்கிறேன். 16. கர்த்தாவே, உயர்ந்தவரும் நல்லவருமான எங்கள் மேய்ப்பரை ஆசீர்வதியும். நீர் அவரோடு இருக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். அவருடைய பிரசங்கத்தில், நான் இன்று அவரைக் கவனித்து, அவர், "தொல்லைகளும் சோதனைகளும் சீக்கிரத்தில் தீர்ந்து விடும்" என்ற அந்தப் பாடலைப் பாடும் போது, அவர் புன்சிரிப்போடு இருந்ததைப் பார்த்தேன். அந்தச் சகோதரிகள், அவர்கள் எப்படியாக brush arbors -ஐச் சுற்றிலும், மற்றும் காம்ப் கூட்டங்களிலும் அதைப் பாடுகிறார்கள். இந்நாட்களில் ஒன்றில் அது முடிந்து விடும், அதன்பிறகு அந்த மகிமையான இளைப்பாறுதலுக்குப் போவோம். 17. இப்பொழுது, பிதாவே, நாங்கள் உம்முடைய வார்த்தையை வாசிக்கையில் எங்களை ஆசீர்வதியும், நாங்கள் அதை வாசித்து, எங்களுடைய சிந்தைகளையும் இருதயங்களையும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கிறோம். இன்றிரவு எங்களோடு பேசும். ஆராதனை முடிந்து, நாங்கள் எங்கள் வீட்டிற்குப் போகத் துவங்கும் போது, நாங்கள் தாமே, "அவர் வழி நெடுக நம்மோடு பேசின போது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா?" என்று கூறுவோமாக. நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். 18. இப்பொழுது நாம் இந்தக் காலையில் அப்படிப்பட்ட மிகவும் நல்லதொரு சுவிசேஷ செய்தியைக் கொண்டிருக்கையில், நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன், அது உங்களுக்குத் தெரியும், சகோதரன் நெவில் அவர்கள் பிள்ளைகளுக்குத் தேவைக்கு அதிகமாகப் போஷிப்பதைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். உங்களால் அது கூடும். ஆனால் இப்பொழுது, இன்றிரவில், சபைக்காக கொஞ்சம் பேசுகிறோம். இது அப்படியே சபைக்காகப் பேசப்படும் ஒன்றாக உள்ளது. நான்... வேறொரு வேதபாகத்தை வாசிக்க விரும்புகிறேன். புதிய ஏற்பாட்டில், மத்தேயு 24-ம் அதிகாரம், 35-வது வசனம், (இங்கு) இயேசு பேசிக் கொண்டிருக்கிறார். வானங்களும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை. 19. இன்றிரவு என்னுடைய பாடம் ஞாபகச் சின்னங்களாக இருக்கிறது: காலத்தால் பரீட்சிக்கப்பட்ட தேவனுடைய ஞாபகச் சின்னங்கள். 20. ஒரு சில அறிவிப்புகள் எனக்குண்டு. நான் அந்த அறிவிப்புகளைக் கொடுத்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.. இங்கேயுள்ள சிலர்.... கர்த்தருக்குச் சித்தமானால், புதன் இரவில், எபிரெயர் 1-ம் அதிகாரத்தோடு கூட்டம் துவங்குவதைக் குறித்து. அதை நான் குறிப்பிட வேண்டியதற்கான காரணம் என்னவென்றால், என்னுடைய கூட்டங்களைப் போன்று (அது இருக்கிறது); நான் ஒரு இடத்தில் இருக்கலாம், அவர் வேறொரு இடத்திற்கு என்னை அழைக்கலாம். அவர் அழைக்கையில் நான் போயாக வேண்டும், அது உங்களுக்குத் தெரியும். 21. ஆகையால் தான் சகோதரன் ஓரல் ராபர்ட்ஸ் அவர்களைப் போன்றோ, இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே தங்களுடைய கூட்டங்களை ஒழுங்கு செய்து, "நாங்கள் அங்கு இருப்போம்" என்று (கூறும்) அந்த மனிதர்களைப் போன்றோ, பெரிய திடமான விசுவாசத்தை உடைய அந்த மனிதர்களைப் போன்றோ என்னால் இருக்க முடியவில்லை. அவர்கள் - அவர்கள் - அவர்கள் தங்கள் செய்தியைப் பெற்றிருக்கிறார்கள். 22. ஆனால் என்னுடைய செய்தியோ, தேவன் அனுப்புகிற எவ்விடமாக இருந்தாலும், அது இங்கேயோ, அங்கேயோ, அது எந்தவிடமாக இருந்தாலும் என்பதாக இருக்கிறது. அவர் அனுப்பும் போது, நான் போயாக வேண்டியிருக்கிறது. அது இரண்டு வித்தியாசமான ஊழியங்களாக இருக்கிறது; அதே தேவன் மாத்திரமே, அந்த அதே தேவன் தான். 23. நான் நேற்று ஒரு அண்டை வீட்டுப் பையனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவன், "ஒரு குறிப்பிட்ட சிறிய மேய்ப்பரை உமக்குத் தெரியும், அவர் அவ்வளவு ஒரு அற்புதமான மனிதராக இருக்கிறார். மனைவியும் நானும் எங்கள் தளர்த்தியான காற்சட்டைகளை அணிந்தபடி, உட்கார்ந்து கொண்டிருந்தோம், ஏறக்குறைய இரவு 11 மணிக்கு, அவர் வந்து கதவைத் தட்டி, 'நான் உங்களுடன் ஒரு கப் காப்பி அருந்தும்படியாக வந்திருக்கிறேன்' என்றார்" என்று கூறினான். பாருங்கள்? "பிறகு அவர் தெருவைக் கடந்து, வேறொரு அண்டை வீட்டிற்குச் சென்றார். அவர்கள் ஏறக்குறைய படுக்கைக்கு போக ஆயத்தமாக இருந்தார்கள், அவர் அங்கே இனிப்பு சாப்பிட்டார். மேலும் அப்படியே..." என்று கூறினார். அதன்பிறகு அவர், அவர் - அவர் குழந்தைகளுக்காக ஒரு சிறிய வேதாகமப் பள்ளியை உடையவராயிருக்கிறார், பிள்ளைகளுக்கு இடமளிப்பதற்காக, வெளியே கூடாரங்களைப் போடும் அளவுக்கு, அவரும் அவருடைய மனைவியும் அதை உடையவர்களாய் இருக்கிறார்கள்" என்றார். 24. பிறகு நான் திரும்பிச் சென்று, "அது சரிதான், என்று உங்களுக்குத் தெரியும். அது, அது ஒரு - அவர் ஒரு அற்புதமான சிறு மனிதர்" என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியிருந்தது. இங்கே சகோதரன் ஃபிளீமேன் இருக்கிறார் என்று நம்புகிறேன், அவருடைய மகன் இங்கே மேலேயிருக்கும் விசுவாச லுத்தரன் சபைக்குப் போகிறான் என்று நம்புகிறேன், ஒரு அற்புதமான சிறிய மனிதரும் அவருடைய மனைவியும், அவர்கள் கர்த்தருக்காக ஒரு மகத்தான வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் நான் நினைத்தேன். நான் என்னுடைய காரை கழுவ வேண்டியிருந்தது, அப்போது நான் -நான் மனந்தளர்ந்து போனேன். நான், "ஏன் என்னால் அதைச் செய்ய முடியவில்லை, பாருங்கள், சுற்றிலும் சென்று, எல்லா பிள்ளைகளையும் என்னைச் சுற்றிலும் பின்தொடர்ந்து வரச் செய்ய ஏன் என்னால் முடியவில்லை? நான் பிள்ளைகளை நேசிப்பவன். ஏன் என்னால் அவ்விதமாக வீட்டிற்கு வீடு, இடத்திற்கிடம் தாவிச்செல்ல முடியவில்லை?" என்று எண்ணினேன். 25. அப்பொழுது ஏதோவொன்று என்னிடம், "நீ அதற்காக அழைக்கப்படவில்லை. தேவன் அவனிடம் சொன்னதை அவன் செய்து கொண்டிருக்கிறான் என்று கூறினது. 26. ஆனால் ஓரல் ராபர்ட்ஸ் மற்றும் அவர்களைப் போன்று யாரோ ஒருவர், ஒரு பட்டயத்தை உடைய யோசுவாவைப் போன்று, விசுவாசம் மற்றும் விடுதலையின் ஒரு செய்தியோடு இங்கே வெளியே நின்றாக வேண்டியிருக்கிறது. மேலும், பாருங்கள்.... கொண்டிருக்கக் கூடிய அவர்களை நாம் கொண்டிருக்கத்தான் வேண்டும். அம்மாதிரியாக, இதைக் கொண்டிருக்கக் கூடிய ஒருவர், ஆனால் ஒரு பெரிய பிரிவை (தொகுதியை) (one big unit) ஏற்படுத்தும்படியாக எல்லாமே ஒன்றாகப் போகிறது. அதுதான் தேவனுடைய சபையாக இருக்கிறது. 27. மனந்தளர்ந்து போய், இருதயம் உடைந்து போன நிலையிலிருந்த ஒரு வாலிப பெண்ணிடம் சற்று முன்பு பேசிக் கொண்டிருந்தேன். ஒரு பெண்ணும் ஒரு மனிதனும் எவ்வாறு பிரியாமல் இருக்கிறார்கள் என்பதைக் குறித்து அவளிடம் பேச முயற்சித்துக் கொண்டிருந்தேன், அவர்கள் ஒரே சிந்தையை உடைய நபர்களாக (same-self person) இருக்கிறார்கள். மனிதன் உண்டாக்கிக் கொண்டான்.... தேவன் மனிதனை, ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்; அவன் மனிதனாக இருந்தான். அது சரியே. பிறகு அவர் அவர்களை மாம்சத்தில் வேறுபிரித்து, அவர்களை வித்தியாசமாக உண்டாக்கினார், ஆனால் அவர்களை ஒன்றாக இணைத்து, ஒன்றாக அவர்களுடைய பிள்ளைகளை பெற்றெடுக்கச் செய்தார். எனவே பலமுள்ளவனும் கப்பலோட்டியுமாகிய மனிதனும், மனிதனுடைய அன்பான பாகமாகிய பெண்ணும். எனவே, அவர்கள் ஒன்றாகவே இருக்கிறார்கள். அது... தேவன் அவர்களைப் பிரித்தார். ஆனால் அவர்கள் இருவரும் அந்த அதே நபராகவே இருந்தார்கள், ம-னி-த-ன். ஸ்திரீயானவன், மனுஷி என்று அழைக்கப்பட்டாள், அது சரியே, ஏனென்றால் அவள் மனிதனிடமிருந்து எடுக்கப்பட்டவளாக இருந்தாள். அவள் மனிதனுடைய ஒரு பாகமாக இருக்கிறாள். ஆனால் இங்கே ஜீவியத்தில், மாம்சத்தில், அவர்கள் தனித்தனியாக பிரிந்திருந்தார்கள் (separated). ஆவியிலோ அவர்கள் ஒருவராயிருக்கிறார்கள். 28. மனிதர்கள் தங்கள் மனைவியின் பேரிலுள்ள தங்கள் அன்பை இழந்து வருவதைக் குறித்தும், அவர்கள் இனிய இருதயமாக இருந்த போது, அவர்கள் அன்புகூர்ந்தது போன்று அவர்கள் நேசிக்காதவர்களாக இருப்பதைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். உங்களுக்கு அவமானம். நீங்கள் அதைச் செய்யத்தான் வேண்டும். அவள் எப்போதுமே உங்கள் இனிய இருதயமாக இருக்கிறாள். முற்றிலுமாக. அவள் இருக்க வேண்டிய பாகம் அதுதான். நீங்கள் அவ்விதமாகத்தான் அவளை நடத்த வேண்டும். ஓ, அந்தச் சிறிய தேனிலவு நிறுத்தப்பட ஒருபோதும் அனுமதிக்காதீர்கள், ஏனென்றால் அது பரலோகத்தில் இருக்கப் போவதில்லை. அங்கே, பரிபூரணமாக ஒன்றாகவே இருக்கப் போகிறது. அது சரியே. எனவே எல்லாரும்.... 29. நல்லது, சில பெண்கள், அதற்கு, "ஆமென்" என்று கூற வேண்டும் என்பது போன்று தோன்றுகிறது. "நீர் எப்போதுமே ஸ்திரீகளை கடுமையாக திட்டிக்கொண்டும், அவ்விதமாகப் பேசிக் கொண்டும் இருக்கிறீரே" என்று நான் ஒருபோதும் - ஒருபோதும் கேட்க அனுமதிக்காதீர்கள். சகோதரி ஹிக்கர்ஸன் அவர்களே, அல்லது அங்கே பின்னாலிருக்கும் யாராவது ஒருவர், நீங்கள் ஏன் ஏதாவது கூறவில்லை , ஏன் கூறவில்லை ...? நீங்கள் ஏதாவது கூறினீர்களா? [சகோதரி காக்ஸ் அவர்கள், "ஆமென்" என்று கூறுகிறார்கள் - ஆசிரியர்.] சகோதரி காக்ஸ் அவர்களே, உங்களுக்கு நன்றி. அது மிகவும் நல்லது. சகோதரன் காக்ஸ் அவர்களே, நீர் இப்பொழுது எங்கேயிருந்தாலும், அது உமக்கானது. சரி. ஆம், ஐயா. 30. ஒருவரையொருவர் கனம்பண்ண நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. எப்போதுமே இனிய இருதயங்களாக இருங்கள். அது நின்றுபோக ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம். 31. கொஞ்ச காலத்திற்கு முன்பு, ஒரு கத்தோலிக்க பையன் என்னிடம் வந்தான். அவனுடைய மனைவி பிரிந்து போயிருந்தாள். அவன், "பில்லி அவர்களே, நான் உம்மிடம் வருவதை வெறுக்கிறேன்; நான் ஒரு கத்தோலிக்கன், நீர் ஒரு புரட்டஸ்டன்ட் சற்று முன்பு, பாதிரியார் என்னை எனது வீட்டை விட்டு விரைந்தோடி வரச் செய்தார்" என்றான். நான், ஹாம், என்ன விஷயம்" என்று கேட்டேன். 32. அவன், "நல்லது, அவர் என்னிடம் சொன்னார். நான் இரவில் கொஞ்சம் குடிப்பதுண்டு, நான் கடினமாக வேலை செய்கிறேன். என்னுடைய மனைவியோ, நான் ஒவ்வொரு இரவும் உள்ளே வந்து, அவளை முத்தமிட்டு, அவளைக் கட்டி அணைக்க வேண்டுமென்று நினைக்கிறாள், நாங்கள் விவாகம் பண்ண ஆயத்தமாக இருந்தது போன்று உணர்ச்சிகரமாக முத்தமிட்டுக்கொண்டேயிருக்க வேண்டுமென்று நினைக்கிறாள். நாங்கள் விவாகம் செய்து, எங்களுக்கு ஒரு கூட்டம் குழந்தைகளும் இருக்கிறார்கள். நாங்கள், ... நேரம் அது தான்" என்று கூறினான். 33. நான், "ஹூப், ஒரு நிமிடம் பொறு, பையனே. நீ தவறாக இருக்கிறாய். நீ தவறாகத்தான் இருக்கிறாய். அது நீ விவாகம் பண்ணுவதற்கு முன்பு இருந்தது போன்று அதேவிதமாகத்தான் இருக்கிறது. புரிகிறதா? நீ எப்போதுமே அதை நினைவில் கொள்ள வேண்டும். அவளுக்கு இப்போது 40 வயது ஆகிறது, உன்னுடைய கவனிப்பு உண்மையாகவே தேவைப்படும் நேரம் இதுவே" என்று கூறினேன். 34. இவ்வாறாக, அவர்கள் விவாகரத்து நீதிமன்றத்தைக் கொண்டிருந்தார்கள். அவன், "நான் என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை " என்று கூறினான். 35. நான், "போய், அவளைக் கூப்பிடு. நான் ஒரு புரட்டஸ்டன்டாக, அங்கே போவேன் என்றால், அவள் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டாள். ஆனால் நான்... புரிகிறதா?" என்றேன். "ஓ, அவளுக்கு உம்மைப் பிடிக்கும்" என்றான். 36. நான், "போய் அவளைக் கூப்பிட்டு, நீ உன்னுடைய மனதை மாற்றிக் கொண்டு விட்டதாக அவளிடம் சொல்" என்று கூறினேன். 37. எனவே அடுத்த நாள், நான் நீதிபதியை அழைத்து அவரிடம் கூறியிருந்தேன். நான் இந்தப் பையனிடம், "நீதிபதி உங்களிடம் மறுபடி ஆலோசிக்கப் போகும் இடத்தின் தரையின் கீழே நான் உட்கார்ந்து கொண்டு, உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருப்பேன். அவளிடம் அதைக் குறித்துக் கூறாதே" என்றேன். "சரி" 38. எனவே, நான் அங்கேயிருந்து, ஜெபித்துக் கொண்டிருந்தேன். சற்று கழிந்து, ஏதோவொரு சிறிய மடக்கொலி (clicking) அந்தப் படியின் கீழே இறங்கி வருவதை நான் கேட்டேன், இதோ அவர்கள் தங்கள் கரங்களை ஒருவரைச் சுற்றி ஒருவர் போட்டுக்கொண்டு, முழுவதும் சிரித்தபடி வருகிறார்கள், உங்களுக்குத் தெரியும். அவன் சொன்னான்... நான், "நல்லது, ஹலோ!" என்றேன். 39. அவன், சகோதரன் பிரன்ஹாமே, நான் உம்மைக் கண்டது முதல், கொஞ்ச நேரம் தான் ஆகிறது!" என்றான். ஆமாம், முப்பது நிமிடங்கள், பாருங்கள். "நான் உம்மைக் கண்டது முதற்கொண்டு கொஞ்ச நேரத்தில்! 40. அவளோ, "ஏன், சங்கை. பிரன்ஹாம் அவர்களே, நீண்ட காலமாக நான் உம்மைக் காணவில்லை! உம்மை மறுபடியும் காண்பதில் மகிழ்ச்சி!" என்றாள். 41. நான், "உங்களுக்கு நன்றி. ஏன், நீங்கள் இனிய இருதங்களாக இருந்தது போன்று தோன்றுகிறதே" என்றேன். "ஓ" "நாங்கள் திருப்தியாக இருக்கிறோம். இல்லையா, தேனே?" என்றான். அவள், "ஆம், நாம் திருப்தியாகத்தான் இருக்கிறோம், அன்பே" என்றாள். மேலும் நான்... அவள், "சங்கை அவர்களே, ஒருநாள் எங்களைக் காண வாருங்கள்" என்றாள். 42. நான், உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் சென்று வாருங்கள்" என்றேன். கடந்து செல்லும்போது, அந்தப் பையன் திரும்பிப் பார்த்து, அந்த விதமாக, கை அசைத்துக் காண்பித்தான். அவை எல்லாமே சம்பவித்தது. அது சரியே. 43. அன்பு எல்லாவற்றையும் ஜெயம்கொண்டு விடுகிறது. அது சரியே, வெறுமனே -வெறுமனே அன்பு. நீங்கள் உங்களுடைய எல்லா அடையாளங்களையும் அத்தாட்சிகளையும் கொண்டிருக்கலாம், ஆனால் எனக்கு வெறுமனே அன்பைக் கொடுங்கள். அது-அதுவே எனக்கு அதைத் தீர்த்து வைக்கிறது. ஓ, என்னே! அருமையான மரிக்கும் ஆட்டுக்குட்டியே, உம் விலையேறப்பெற்ற இரத்தம் எக்காலத்தும் அதன் வல்லமையை இழந்து போவதில்லை, மீட்கும்தொகை கொடுத்து மீட்கப்பட்ட தேவனுடைய சபையிலுள்ள எல்லோரும் இனி பாவமே செய்யாதபடி இரட்சிக்கப்படும் வரைக்கும். (பாருங்கள்?) உம் காயத்திலிருந்து பெருக்கெடுத்து வரும் நதியை நான் விசுவாசத்தால் கண்ட முதற்கு, மீட்கும் அன்பே என் பொருளாக உள்ளது, நான் மரிக்கும் வரை அவ்வாறே இருக்கும். அது சரியே. ஓ, அற்புதம்! 44. இப்பொழுது, காலத்தால் பரீட்சிக்கப்பட்ட ஞாபகச் சின்னங்கள்! இந்தக் காலையில், ஞாயிறு பள்ளியில் கொடுக்கப்பட்ட நம்முடைய செய்தியிலிருந்து, சுவிசேஷ செய்தியிலிருந்து நான் இந்தக் கருத்தைப் பெற்றுக்கொண்டேன், அங்கே நமது சகோதரன் எலியாவைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். அங்கே அவன்... செய்ய விரும்பினான். இந்தப் பையன்கள், தீர்க்கதரிசிகளின் பள்ளிகள், அவர்கள் ஏதோவொரு விதமான ஒரு பெரிய பள்ளியை கட்டும்படியாக எவ்வளவாக விரும்பினார்கள். அது என்னுடைய மனதில் வந்தபோது, நான், "ஞாபகச் சின்னங்கள்" என்பதைக் குறித்த சிந்தனைகளை சிந்தித்துக் கொண்டிருந்தேன், 45. இப்பொழுது, ஒரு ஞாபகச் சின்னம் என்பது ஒரு ஒரு மகத்தான காரியமாகும். நாம் ஞாபகச் சின்னங்களைப் பாராட்டுகிறோம். இந்த ஜீவியத்தில், அநேக மனிதர்கள், ஏதோவொரு விதமான ஞாபகச் சின்னத்தை தங்களுக்கு பின்னே விட்டுப்போக முயற்சித்திருக்கிறார்கள். ஏறக்குறைய எல்லா மனிதருமே அதைச் செய்ய விரும்புகிறார்கள். தங்களுடைய கல்லறையில் (graveyard) ஒரு மகத்தான அடையாளச் சின்னத்தை வைக்கிறார்கள். அதெல்லாம் சரிதான். நிச்சயமாக. நான் அதைப் பாராட்டுகிறேன். அதுஅது சரிதான். பிறகு அநேகர் மகத்தான தேவாலயங்களை கட்ட முயற்சிக்கிறார்கள். 46. நான் இப்பொழுது குறிப்பிட விரும்பும் ஒரு ஞாபகச் சின்னம் எதுவென்றால், அது ஓஹியோவில் உள்ளது, அங்கே ஒரு கடவுள் நம்பிக்கையற்ற நாஸ்திகன் இருந்தான். அவனுடைய பெயரை மறந்து விட்டேன். ஏதோவொரு இடத்தில் என்னிடம் அந்தப் படம் உள்ளது, நான் அங்கே வீட்டில் சேகரித்து வைத்திருக்கும் ஏதோவொரு இடத்தில் அது உள்ளது. அவன் தன்னுடைய மரணத்துக்குப் பிறகு, தன்னுடைய காலை வேதாகமத்தின் மேல்வைத்து, அந்த விதமாக கீழே சுட்டிக்காட்டி, "மத மூடநம்பிக்கைகளுக்கு அப்பால், நவீன விஞ்ஞானத்தோடு மேலே" என்று கூறும்படியுள்ள ஒரு ஞாபகச் சின்னத்தை தனக்கு கட்ட விரும்பும் அளவுக்கு, அவன் கிறிஸ்தவத்துக்கு விரோதமாக மிகவும் உறுதியாக இருந்தான். அவன் மரித்துக் கொண்டிருந்த போது, "நான் தவறாக இருந்திருப்பேன் என்றால், பாம்புகள் என்னுடைய கல்லறையை விட்டு வெளியே ஊர்ந்து செல்லும்" என்றான். அவன் மரித்தபோது, அவர்கள் இன்னுமாக அந்தக் கல்லறைக்குள் மண்வாரியைக் கொண்டு மண்ணைப் போட்டுக் கொண்டிருக்கையில், அவர்கள் இரண்டு அல்லது மூன்று பெரிய விரியன் பாம்புகளைக் கொன்று போட்டார்கள். இன்று, சமீபத்தில் ஒரு ஊழியக்காரர் அந்தக் கல்லறைத் தோட்டத்தில், ஒரு புகைப்படத்தை எடுத்து, என்னிடம் காண்பிக்கும்படி கொண்டு வந்தார், நிறைய உள்ள அவருடைய... ஐச் சுற்றிலும் சங்கிலிகளின் மேல் தொங்கவிட்டுக் கொண்டிருந்தார். அந்தக் கல்லறைபூமி (graveyard) ஒரு அழகான இடமாகத்தான் இருக்கிறது, ஆனால் அவனுடைய மண்மேடோ ஒரு பாம்பின் மண்மேடாக இருக்கிறதே அல்லாமல் வேறு எதுவாகவும் இருக்கவில்லை. இலையுதிர்காலமோ குளிர்காலமோ கூட, அது ஒரு பொருட்டல்ல, பாம்புகள் இன்னும் அவனுடைய கல்லறையிலிருந்து ஊர்ந்து சென்றவண்ணம் இருக்கிறது: ஒரு ஞாபகச் சின்னம்! அதைப்போன்ற ஒரு ஞாபகச் சின்னத்தை நான் எப்பொழுதாவது கொண்டிருக்க, அல்லது உங்களில் யாராவது எப்பொழுதாவது கொண்டிருக்க தேவன் அனுமதிக்கவே மாட்டார். எனவே அங்கே ஞாபகச் சின்னங்கள் இருக்கின்றன. ஆயினும், மகத்தான ஞாபகச் சின்னங்கள் தான். 47. பலம் பொருந்திய யுத்தவீரனாகிய, யோசுவாவைக் குறித்து சிந்தித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த இருபது இலட்சம் யூதர்களுடைய தலைவனாக இருந்த, மோசேயினுடைய ஆயுதங்களை எடுத்துச்சென்ற அவன் எப்படிப்பட்ட ஒரு மகத்தான மனிதனாக இருந்தான். மோசே தெரிந்து கொள்ளப்பட்டு, வெளியே அழைப்பட்டு, ஒரு சேவைக்காக பிரித்தெடுக்கப்பட்டிருந்தான். யோசுவா, உள்ளே பிரவேசித்து, அந்த மனிதனுடைய ஸ்தானத்தை எடுப்பதற்கும், இந்த தீர்க்கதரிசியினுடைய ஸ்தானத்தைப் பின்பற்றி வருவதற்கும் அவன் நிச்சயமாகவே செய்ய வேண்டிய ஒரு மகத்தான காரியம் இருந்தது. அவன் ஒரு வல்லமைமிக்க யுத்த வீரனாகவும், தேவனால் அழைக்கப்பட்டவனாகவும், முன்குறிக்கப் பட்டவனாகவும் நியமிக்கப்பட்டவனாகவும் இருந்தான். தேவன் விடுவிப்பார் என்றும், அவர் அவர்களிடம் விஜயம் செய்வார் என்றும் அவன் எப்பொழுதாவது வருவதற்கு 400 வருடங்களுக்கு முன்பே தேவன் கூறியிருந்தார். மோசே எப்படிப்பட்ட ஒரு மாவீரனாக இருந்தான்! 48. இயேசு கிறிஸ்து அதைச் செய்ய முடிந்தது வரையில், மோசேயின் ஸ்தானத்தை எடுப்பதற்கோ, அவைகளைப் பின்பற்றி வருவதற்கோ ஒரு மனிதனும் கிடையாது. அவன் தானே, "உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்கள் மத்தியில் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார். நீங்கள் இந்த தீர்க்கதரிசி சொல்லுவதைக் கேட்காவிட்டால், இந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவன் எவனோ, அவன் அறுப்புண்டு போவான், அது வந்து சம்பவிக்கும்" என்று சொல்லியிருக்கிறான். சரி. இப்பொழுது, இந்த மகத்தான ஞாபகச் சின்னம். 49. யோசுவா நதிக்கு இறங்கி வந்திருந்தான். மோசே மரித்த பிறகு , யோசுவா அவனுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டான். அவன், "இப்பொழுது உங்களை நீங்களே பரிசுத்தமாக்கிக் கொண்டு, உங்களுடைய வஸ்திரங்களைத் தோய்த்து, ஒப்புக்கொடுத்து (set apart), உங்கள் மனைவிகளிடம் வராதிருங்கள். மூன்றாம் நாள், தேவன் ஏதோவொரு காரியத்தைச் செய்யப் போகிறார்" என்றான். ஓ, நான்.... 50. ஞாயிறு ஆராதனைகளில், இந்த இரவுகளில் ஒன்றில், அந்த "மூன்றாம் நாள்" என்பதின் பேரில் பிரசங்கித்து, அவைகளுக்குள், அந்த மூன்றிற்குள் என்ன வல்லமை இருக்கிறது என்பதை உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். நான் அதை இந்தக் காலையில், ஜெபத்தில், குறிப்பிட்டேன்; எல்லோருமே மூன்று காரியங்களைக் கொண்டிருந்தார்கள் மேலும் வேதாகமத்தின் வாயு அல்லது காற்று பற்றிய ஆய்வியல் (pneumatics). 51. "இப்பொழுது, மூன்றாம் நாளிலே நீங்கள் தேவனுடைய மகிமையைக் காண்பீர்கள்." இப்பொழுது அது போகிறது... அவன் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறானோ அதைத் திட்டமாக அறிந்திருந்தான் என்பதை காண்பிக்க போவதாய் இருந்தது, ஏனென்றால் அது எப்போது சம்பவிக்கப் போகிறது என்ற சரியாக நேரத்தை அவன் குறிப்பிட்டான். யோசுவா அங்கே வெளியே அந்த இஸ்ரவேலர்கள் எல்லார் முன்பும் நின்று கொண்டிருந்த போது, அவன் எப்படி உணர்ந்திருப்பான் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இப்பொழுது, அவனுடைய வார்த்தை கட்டாயம் உண்மையாக இருந்தாக வேண்டும். அங்கே அலைகள் கொந்தளித்து பொங்கிவந்து கொண்டிருந்த யோர்தான் இருந்தது. 52. நீங்கள் பாருங்கள், ஒரு மனிதனுடைய குணாதிசயமானது அவனுடைய கிரியைகளின் மூலமாக அறியப்படுகிறது. நீங்கள் யாராயிருந்தாலும், உங்களுடைய கிரியைகள் நீங்கள் யார் என்பதை நிரூபித்துக் காட்டுகின்றன. நீங்கள் எவ்வளவு சாட்சி கூறுகிறீர்கள் என்பது ஒரு பொருட்டேயல்ல, நீங்கள் என்னதான் கூறினாலும், அதற்காகவோ அல்லது அதற்கு விரோதமாகவோ (pro or con) அது இருந்தாலும், அதற்கு அதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது. நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்று உங்களுடைய கிரியைகள் கூறுகிறது, உள்ளே நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்பதை அது கூறுகிறது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு கிரியையும் (job), நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. 53. வர்த்தகர்களாகிய நீங்கள் தற்காலிக உபயோகத்திற்காக செய்யப்படும் ஒரு வேலையை (patchedup job) செய்வீர்களானால், நான் என்ன கூறவருகிறேன் என்று பாருங்கள், வெறுமனே அரைகுறை வேலை, அதைச் செய்யாதீர்கள். உங்களால் அதைச் சரியாகச் செய்ய முடியாவிட்டால், அதைச் செய்யவே வேண்டாம். அது சரியே. 54. நீங்கள் கிறிஸ்துவிடம் வரும்போது, நீங்கள் கையிருப்பு சரக்குகளையும் (stock), பானையையும் (barrel) முழுமையாக விட்டுவிட்டு, பூட்டுப்போட்டு விட்டு, கிறிஸ்துவிடம் வர முடியாவிட்டால், நீங்கள் வரவே வேண்டாம். ஆனால் நீங்கள் உண்மையிலேயே ஒரு கிறிஸ்தவனாக இருக்க விரும்பும்போது, வெளிப்படையாக நில்லுங்கள் (stand out). அதை உண்மையாகச் செய்யுங்கள். நீங்கள் அவ்வாறு இருக்க வேண்டுமென்று தான் தேவன் விரும்புகிறார். அது - அது நிரூபித்துக் காட்டும், உங்கள் கிரியைகளானது உங்களுடைய குணாதிசயம் எப்படியிருக்கிறது என்பதை நிரூபிக்கும். நீங்கள் செய்யும் கிரியைகள் மூலமாக உங்களுடைய குணாதிசயம் அறியப்படுகிறது. 55. இப்பொழுது, யோசுவா, அவனுடைய வார்த்தையானது துணிந்து செய்யும்படியானதாக இருந்தது; ஆம், ஐயா, பழங்காலத்து நோவாவைப் போன்று அப்படியே ஆனால் யோசுவா கட்டாயம் இந்த நதியைக் கடந்தாக வேண்டும். எப்பொழுதும் சிந்தித்துப் பார்க்கக் கூடியதிலேயே மோசமான நேரத்தை அவன் தேர்ந்தெடுத்தது போன்று தோன்றுகிறது. அது ஏப்ரல் மாதத்தில் இருந்தது. அப்பொழுது யூதேயாவில் பனியானது உருகி, மலைகளினூடாக கீழே வந்து கொண்டிருக்கும், அந்தப் பழைய யோர்தானானது சேறாக இருந்து, யோர்தானுடைய வயல் நிலங்களுக்கு நீர்பாய்ச்சும்படியாக, அந்த வயல்நிலங்களுக்குள் நேராக வெளியே பரவிச் சென்றது. அது கணிதரீதியாகவோ, அல்லது-அல்லது கல்வியின்படியோ, அல்லது விஞ்ஞான ரீதியாகவோ இருந்திருக்குமென்றால், அவன் - அவன் யோர்தானைக் கடப்பதற்கு வருடம் முழுவதிலும் மோசமான நேரத்தையே தேர்ந்தெடுத்தது போன்று காணப்பட்டது. ஆனால் அவர் தேவனாக இருக்கிறார் என்பதை நிரூபிக்கும்படியாக அம்மாதிரியான நேரத்தையே எடுத்துக்கொள்ள தேவன் விரும்புகிறார். 56. தேவனை விசுவாசித்து, தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்பதை அறிந்திருக்கிற, தேவனுடைய மனிதர்கள், அதைச் செய்ய பயப்பட மாட்டார்கள், ஏனென்றால் அவர் தேவனாக இருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக, தேவன் தம்முடைய வார்த்தையோடு தொடர்ந்து உண்மையுள்ளவராய் இருப்பார். 57. அவன், "முதலாவது, உடன்படிக்கை பெட்டியை எடுத்துக்கொண்டு, முன்னோக்கிச் செல்லுங்கள்" என்றான். அந்த ஆசாரியர்களுடைய கால்கள் அந்த யோர்தானில் பட்டவுடனே, அவள் எவ்வளவு கட்டுக்கு அடங்காததாக இருந்தாலும், அவள் எவ்வளவு கொந்தளித்துப் பொங்கினாலும், அது ஒரு பொருட்டல்ல, அது தேவனுடைய நித்திய வார்த்தையை போக விட்டது (give away), வார்த்தையானது உடன்படிக்கைப் பெட்டிக்குள் இருந்தது. இப்பொழுது, இயேசு சொன்னார், "வானங்களும் பூமியும் ஒழிந்து போகும், ஆனால் என்னுடைய வார்த்தையோ ஒருபோதும் ஒழிந்து போகாது" என்றார். எனவே, யோசுவா, தன்னுடைய வார்த்தை தேவனுடைய வார்த்தையின் மேல் இளைப்பாறிக் கொண்டிருக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தான், அவன் தேவனுடைய வார்த்தையை முதலாவது வைத்தான். 58. இன்றிரவு வியாதிப்பட்டவர்களாய் இங்கேயிருக்கும் ஜனங்களாகிய நீங்கள் அதைச் செய்ய விரும்புகிறேன், உங்களுடைய அறிக்கையோடு கூட தேவனுடைய வார்த்தையை வையுங்கள். உங்களுடைய அறிக்கையை வைத்து, அதை விசுவாசித்து, அதை அங்கேயே அதைத் தொடங்குங்கள்; இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல அழையுங்கள். அதன்பிறகு தொடர்ந்து அணிவகுத்துச் செல்லுங்கள். அந்தவிதமாக அதைச் செய்யுங்கள். தேவனுடைய வார்த்தை அதனுடன் செல்லும். 59. ஆசாரியர்களின் கால்கள் யோர்தானில் படுகையில், அவள் அப்படியே பின்னிட்டுத் திரும்பி (rolled back), இருபுறமும் நின்றது (from side to side). தண்ணீ ர் நின்றது. 60. உணர்ந்து கொள்ளுகிறீர்களா? அந்த நதியின் முழக்கம், இருபது நிமிட நேரத்தில், அங்கே எல்லைக்கோட்டை உண்டாக்கினது, நமக்கிருக்கிற இந்த நவீன பெரிய அணைகட்டுகளின் சிலவற்றைப் போன்றோ, அங்கே வெளியே இருக்கும் கொலராடோ போல்டர் அணைக்கட்டைப் (Colorado Boulder Dam) போன்றோ அவ்வளவு பெரிதாக இருந்தது. யோர்தான் ஆனது அங்கே அதனூடாக வேகமாக பெருக்கெடுத்து (sweeps), அந்தவிதமாக அந்த மலையிலிருந்து பெரும் அழுத்தத்துடன் வந்து கொண்டிருந்தது, அவள் அந்த பள்ளத்தாக்குகளினூடாக பெருக்கெடுத்து வந்து கொண்டிந்தாள் (sweeping). 61. ஸ்திரீகள் மற்றும் பிள்ளைகளோடு கூட, இருபது இலட்சம் காலாட்கள் கொள்ளளவு திறன் (capacity) இருந்து, அநேகமாக நான்கு அல்லது ஐந்து மணி நேரங்களோ, அல்லது இன்னும் அதிக நேரமோ அதற்குத் தேவைப்பட்டது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அந்த நதி நிரம்பியிருந்தது. ஆனால், தேவனோ அந்த நதியை நிற்கப்பண்ணினார். ஆமென். ஓ, நான் அதை விரும்புகிறேன். அந்த நதிகளை நிறுத்தினார்! அவர்கள் அதைக் கடப்பது மட்டுமாக, அவள் அங்கேயே இருந்தாள் (laid). 62. அதன்பிறகு தேவன் யோசுவாவிடம், "இதன்பேரில் ஒரு ஞாபகச் சின்னத்தை உண்டாக்க நாம் விரும்புகிறோம். அங்கே வெளியே சென்று, ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவனாக, ஒவ்வொரு இஸ்ரவேலரையும் அனுப்பி, பன்னிரண்டு கற்களைத் தூக்கி எடுத்து, ஒரு ஞாபகச் சின்னத்தை உண்டாக்கு என்றார். உங்கள் பிள்ளைகள் இந்த வழியினூடாக கடந்து போகும் போது, அவர்கள், 'இந்தக் கற்கள் இங்கேயிருப்பதற்கு என்ன காரணம்?' என்று கேட்பார்களானால், தேவன் எவ்வாறு யோர்தானை நிறுத்தினார் என்ற கதையை அவர்களிடம் கூற வேண்டும், இந்த ஞாபகச் சின்னம் அதுவாக இருக்க வேண்டும்" என்றார். அது ஒரு அற்புதமான ஞாபகம் தான். சமீபமாக வந்த வருங்காலத்தில், ஏதோவொரு நாளில், இந்தக் கற்களைப் பார்க்கும்போது, அவைகள் அங்கே இன்னுமாக ஒரு ஞாபகச் சின்னமாக நின்று கொண்டிருந்தன. ஆனால் பிறகு வேறொரு ஞாபகச் சின்னத்தைக் குறித்து சிந்தித்துப் பார்க்கிறேன்.... அது என்னவொரு ஆசீர்வதிக்கப்பட்ட ஞாபகச்சின்னமாக இருந்தது! 63. அதன்பிறகு நான் வேறொரு ஞாபகச் சின்னத்தைக் குறித்து சிந்தித்துப் பார்க்கிறேன், அது ஒருநாள், ஒரு பெண் தவறான தெரிந்தெடுத்தலைச் செய்திருந்த போது. அவள் நீர்பாய்ச்சலான சமபூமியில் தங்க (stay up) கூடாது என தீர்மானித்தாள், அல்லது சோதோம் கொமோராவுடைய நீர்ப்பாய்ச்சலான சமபூமியில் தங்கியிருந்து, கூடிப்பழகும் இயல்புடையவளாய், அந்நாட்களில் இருந்த அந்த மற்ற பெண்களைப் போன்று ஜீவிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டாள். 64. வறண்ட தரிசு நில பூமியில் தங்கின சாராளைப் போன்று அவள் நல்ல தெரிந்து கொள்ளுதலைச் செய்யவில்லை. அவள் (சாராள்) மாத்திரமே தேவனுடைய வார்த்தையை தன்னுடைய இருதயத்தில் வைத்திருந்தாள். அவள் தன்னுடைய கணவனுக்கு கீழ்ப்படிகிற வளாகவும் மிக அருமையானவளாகவும் இருந்தாள், அவள் அவ்வளவாய், அவனை, ஆண்டவனே என்று அழைத்தாள். அங்கு தான் தேவன் இரண்டு தூதர்களோடு இறங்கி வந்து, அந்தக் கூடாரத்தில் அவர்களிடம் விஜயம் செய்தார். 65. ஆனால், திருமதி. லோத்துவோ, அவள் மிகவும் உலகப்பிரகாரமாக ஆகி, உலகத்தின் காரியங்களை ஏற்றுக்கொண்டாள். இன்று, மிகவுமாக உலகப்பிரகாரமான சிந்தையை உடையவர்களாய் ஆக முடிகிற, நமக்கு அது என்னவொரு பாடமாக இருக்கிறது. நான் மிகவும் நிச்சயமுடையவனாயிருக்கிறேன், இன்று முழு சபையும் மிகவும் உலகப்பிரகாரமான சிந்தையை உடையவர்களாக (worldly-minded) ஆகிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது, ஒருக்கால், திருமதி. லோத்து, அவள் அங்கே போனபோது, அதைச் செய்ய கருதாமல் இருந்திருக்கலாம். அவள், "கூடிப்பழகும் இயல்புடையவளாய் இருப்பேன்" என்று நினைத்தாள். கூடிப்பழகும் இயல்புடையவர்களாய் இருப்பது எல்லாம் சரிதான், ஆனால் உலகத்தின் பழக்கவழக்கங்களை எடுத்துக்கொள்ளாதீர்கள் (take up). 66. நீங்கள் போகும்போது, சாத்ராக், மேஷாக், ஆபெத்நேகோவைப் போன்று செல்லுங்கள். அவர்கள் தங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளக் கூடாது என்று தங்களுடைய இருதயத்தில் நோக்கம் கொண்டிருந்தார்கள், எது வந்தாலும் போனாலும் காரியமில்லை. மற்ற உலகத்தார் பின்வாங்கிப் போனாலும், என்ன நடந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவர்கள் தங்களுடைய இருதயத்தில் நோக்கம் கொண்டிருந்தார்கள். அவர்கள் இன்று ஒரு ஞாபகச் சின்னமாக இருக்கிறார்கள். 67. மேலும் திருமதி. லோத்து ஒரு ஞாபகச் சின்னமாக நிற்கிறாள். தேவன் அவளுக்குத் தம்முடைய கடைசி கிருபையின் செய்தியைக் கொடுத்து, அவர் அந்த தூதர்களை அங்கே அனுப்பி, ஒரு சில மணி நேரங்களில் சோதோமும் கெமோராவும் சுட்டெரிக்கப்படப் போகின்றன என்று அவர்களிடம் கூறப்பட்ட போது, இன்னுமாக, தன்னுடைய சமுதாய ஜீவியத்தை விட்டுவிட்டு, வெளியே வனாந்தரத்திற்கு , அங்கே வெளியே வனாந்தரத்தில் ஜீவித்திருந்த சாராளைப் போன்று ஜீவித்து, பகட்டற்ற பெண்மணிகளுடைய சாதாரணமான எளிய வஸ்திரங்களை உடுத்த வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டவளாய் நிற்க அவளால் முடியாதிருந்தது. அவளுடைய கணவன் அந்தப் பட்டணத்தில் ஒரு மகத்தான மனிதனாக ஆகியிருந்தான். அவன் ஒரு நியாயாதிபதியாகவோ அல்லது பட்டணத்தின் ஒரு மேயராகவோ வாசலில் உட்கார்ந்திருந்தான். அவள் இந்த ஆடம்பரங்களை விரும்பினாள். அக்காரியங்களை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவளாய் அவளால் நிற்க முடியாதிருந்தது. அவள் தன்னுடைய கணவனோடு பட்டணத்தை விட்டு வெளியே போகையில், அவள் தொடர்ந்து பின்னிட்டுப் பார்த்துக் கொண்டேயிருந்து, அவள் அதை விட்டுவிட்டு, அந்த மரணத்தின் சுபாவத்திலிருந்து தன்னை வேறுபிரித்துக்கொள்ள வேண்டியிருந்த காரணத்தினால் அழுதுகொண்டும் துக்கப்பட்டுக்கொண்டும் இருந்தாள். 68. "கலப்பையின் மேல் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்ப்பதற்குக் கூட திரும்புகிற மனுஷன், உழுவதற்கு தகுதியுள்ளவன் அல்ல" என்று இயேசு கூறியுள்ளார். நாம் எம்மாதிரியான ஜனங்களாய் இருக்க வேண்டும்? கலப்பையின் மேல் கையை வைத்து பின்னிட்டுப் பார்க்காமல் இருந்தும் கூட, ஆனால் பின்னிட்டுப் பார்க்க சற்று திரும்பினாலும் கூட, அவன் உழுவதற்கு அவனுக்கு தகுதியும் கூட கிடையாது. ஓ, நாம் நம்முடைய கண்களையும் இருதயங்களையும் ஒருவரிடம் மாத்திரமே வைத்திருக்க வேண்டும். மற்ற ஜனங்கள் என்ன செய்தாலும், சபை என்ன செய்தாலும், அண்டைவீட்டார் என்ன செய்தாலும், மற்ற யாராவது என்ன செய்தாலும், அது ஒரு பொருட்டல்ல, உங்கள் இருதயத்தை கல்வாரியின் மேல் ஒருமுகப்படுத்தி கவனம் செலுத்துகிறவர்களாய் வைத்துக் கொள்ளுங்கள். பின்னிட்டுப் பார்க்கும்படி நிற்கக் கூட செய்யாதீர்கள். பின்னிட்டுப் பார்க்க நமக்கு எந்த நேரமும் இல்லை. 69. இந்த ஸ்திரீ. அவள் அவ்வாறு செய்த காரணத்தினால், ஜனங்கள் ஒருகாலத்தில் கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டிருந்த பிறகு, பின்னிட்டுப் பார்க்கத் திரும்பின ஜனங்கள் எல்லாருக்கும் தேவன் ஒரு ஞாபகச் சின்னத்தைக் கொடுத்தார். அவள் உப்புத்தூணாக மாறினாள். இந்நாள் வரையில், அவள் அங்கே நின்று கொண்டிருக்கிறாள், அந்த ஸ்திரீ தன்னுடைய தலையைத் திருப்பினவளாய், பின்னிட்டுப் பார்த்துக் கொண்டு அங்கே நின்று கொண்டிருப்பதை அந்தப் பிரதேசத்தில் காண முடியும். அவள் அந்த பிரதேசத்திற்குள் பின்னிட்டுப் பார்க்கும்படியாக, தன்னுடைய இடது தோள்பட்டைக்குத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய இருதயம் அங்கே பின்னால் தான் இருந்தது. இருப்பினும், அது இருந்த வணணமாக, இதைச் செய்யும்படியாக, அவள் கட்டாயப்படுத்தப்பட்டாள். 70. இன்று, அநேக ஜனங்கள் கிறிஸ்துவை அந்தவிதமாகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் உலகத்திலிருந்து வெளியே வந்தும், அவர்கள் அதைச் செய்யும்படியாக கட்டாயப்படுத்தப்படுவது போன்று உணருகிறார்கள். அவர்கள் தொடர்ந்து ஆசையோடு ஏங்கிக்கொண்டும், இச்சித்துக் கொண்டும் இருக்கிறார்கள், அவர்கள் திரும்பி வரும் அளவுக்கு அதிக காலமில்லை. அவர்களுக்குக் காண்பிக்கப்பட்டது போன்ற, தேவனுடைய கிருபையின், தேவனுடைய அன்பின் ஒரு பயங்கரமான ஞாபக சின்னங்களாக அவர்கள் - அவர்கள் இருக்கிறார்கள். இப்பொழுது, ஞாபகச் சின்னங்கள்! 71. இப்பொழுது, இயேசு பூமியில் இருந்த நாட்களில், அந்த யூதர்கள் ஒரு ஞாபகச் சின்னமாக ஒரு தேவாலயத்தைக் கட்டியிருந்தார்கள். அந்த ஆலயம் எவ்வளவு அழகாகக் கட்டப்பட்டிருந்தது என்பதை அவர்கள் இயேசுவுக்குக் காண்பித்திருந்தார்கள். அவர் சொன்னார்... அந்த ஆலயத்தைக் கட்ட நாற்பது வருடங்கள் எடுத்துக்கொண்டது; ஒட்டுமொத்தமாக, ஏறக்குறைய எண்பது வருடங்கள். நாற்பது வருடங்களாக, அவர்கள் உலகத்தின் வெவ்வேறு பாகங்களிலிருந்து கற்களை வெட்டியெடுத்துக் கொண்டிருந்தார்கள் (cutting out). அதனுடைய நாற்பது வருட கட்டுமானத்தில், ஒரு இரம்பம் அறுக்கும் சத்தமோ அல்லது சம்மட்டியின் சத்தமோ இல்லாதிருந்தது. 72. ஆனால் இயேசுவும் கூட, "இதை நோக்கிப் பார்க்காதீர்கள், ஒரு கல்லின் மேல் மற்றொரு கல், ஒரு கல்லின் மேல் மற்றொரு கல் மீதியாக விடப்படாமல் போகும் ஒரு நேரம் வரும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியும். 73. இந்த மகத்தான ஞாபகச் சின்னமாகிய வார்த்தைகளை அவர் கூறுவதற்கு சற்று முன்பு, 'வானங்களும் பூமியும் ஒழிந்து போகும், ஆலயங்களும் ஒழிந்து போய் விடும், ஞாபகச் சின்னங்களும் ஒழிந்து போம், ஆனால் என்னுடைய வார்த்தையோ நித்தியமான ஞாபகச் சின்னமாக இருக்கிறது" என்றார். 74. அநேக வருடங்களுக்கு முன்பே, உடன்படிக்கை) பெட்டி (ark) அழிந்து போய் விட்டது. தீர்க்கதரிசிகளின் கல்லறைகள் உள்ளே விழுந்து போய் விட்டன. வித்தியாசமான ஞாபகச் சின்னங்கள் எல்லாமே புராதன தொன்மையான காலங்களில் சிதைந்து அழிந்து போய் விட்டன, கல்லை புரட்டிப்போட்டு விட்டன (washed away). ஆனால் தேவனுடைய வார்த்தையோ தொடர்ந்து மாறாமலும், என்றென்றும் என்றென்றுமாக அழகானதாயும் இருக்கிறது. அது உரைக்கப்பட்ட அந்த நாளில் இருந்தது போலவே, இன்றிரவு இந்நாளின் விசுவாசிகளுக்கும் அப்படியே ஜீவனுள்ளதாகவும், புதியதாகவும் இருக்கிறது. 75. ஆச்சரியமில்லை , எலியா, இந்தக் காலையில், நம்முடைய.... நம்முடைய சகோதரன் நமக்குக் கொடுத்த செய்தி. அவர்கள் ஒரு மகத்தான பள்ளியை தீர்க்கதரிசிகளுக்காக, ஒரு ஞாபகச் சின்னமாக, கட்ட விரும்பினார்கள், ஆனால் எலியா ஒரு சிறந்த காரியத்தைத் தெரிந்து கொண்டான், விழுந்த ஒரு இரும்பு ஆயுதத்தை மேலே எழுந்துவரச் செய்து, அதைத் தண்ணீரின் மேல் மிதக்கப்பண்ணும்படியான தேவனுடைய ஒரு அற்புதம். அது கர்த்தருடைய வார்த்தையாக இருந்தது. 76. இன்றிரவு, கர்த்தருடைய வார்த்தையை தன்னுடைய இருதயத்தில், ஒரு ஞாபகச் சின்னமாக பெற்றுக்கொள்பவன், ஏதோவொரு மகத்தான ஞாபகச் சின்னத்தை எழுப்ப முயற்சிப்பவர்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தவனாக இருக்கிறான். 77. கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் கேள்விப்பட்டேன், நான் இத்தாலியில் இருந்தபோது, முசோலினியையும் நாற்பது சொச்சம் அடிகள் உயரமுடைய அந்த மகத்தான உருவச்சிலையையும் குறித்து கேள்விப்பட்டேன், அவன் ஒரு தடகள வீரனாக இருந்தது போல, தடகள விளையாட்டுக்கு ஒரு ஞாபகச் சின்னமாக அவன் அதைக் கட்டினான். அந்த ஞாபகச் சின்னத்தை காண நான் விரும்பினேன். அது ஒரு பெரிய ஆற்றல்மிக்க வெடிகுண்டினால் தூள்தூளாக தகர்க்கப்பட்டுப் போயிருந்தது. 78. மகத்தான கோயில்களையும் விக்கிரக சிலைகளையும் எழுப்பியிருந்த எகிப்திலுள்ள பார்வோன்கள் இருந்த இடத்தின் மேல் ஏறக்குறைய இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பு நின்றிருந்தேன். மேலும் நான்.... அந்த ஞாபகச் சின்னங்கள் நின்றிருந்த இடத்தின் தரையைக் கூட கண்டுபிடிக்கும்படி, பூமியின் கீழே இருபது அடி நீங்கள் தோண்ட வேண்டுமென்று அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள். 79. அகஸ்டா இராயன் (Caesar Augusta) இருந்த இடத்தில் நான் நின்றிருந்தேன், அங்கே ஏரோதுகளும் மற்றும் ரோமாபுரியின் மகத்தானவர்களும் இருந்தார்கள். நான் ஒரு வீதியில் சென்றேன், அங்கு தான் அவன் அரண்மனையிலிருந்து அந்த தெருவுக்கு வழக்கமாகப் போவானாம், அது ஏறக்குறைய பூமிக்கு கீழே 25 அடிகள் (ஆழத்தில்) இருக்கிறது. அந்த ஞாபகச் சின்னங்கள் போய் விட்டன. 80. ஆனால் அந்த ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையோ இன்னும் தொடர்ந்து மாறாததாகவும், அப்படியே விலைமதிப்புக் குரியதாகவும் உள்ளது. அது ஒரு ஞாபகச் சின்னமாக இருக்கிறது. 81. எனவே சகோதரனே, இன்று நான் கூறுகிறேன், நீங்கள் செய்கிற காரியங்களும், நீங்கள் பேசும் வார்த்தைகளும், உங்கள் அண்டை வீட்டாரை நீங்கள் எவ்விதம் நடத்துகிறீர்கள் என்பதும், கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதும், ஒரு நித்திய ஞாபகச் சின்னமாகவே இருக்கும். உங்களுடைய பிள்ளைகளை விட்டுச்செல்வதற்கு உங்களுக்கு ஒரு அருமையான வீடு இருக்கலாம். உங்களுடைய பிள்ளைகளை விட்டுப்போக, ஏதோவொரு பிழைப்புக்காக நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கலாம். ஆனால் அதற்குப் பதிலாக வேறு எதைக் காட்டிலும் தேவனுடைய வார்த்தையிடமே நான் அவர்களை விடுவேன். அந்த வீடுகள் மறைந்து போய் விடும். அது முற்றிலும் சரி, அதுதான் நல்லது. அதற்கு விரோதமாக எனக்கு எதுவும் கிடையாது. ஆனால் அந்தச் சிறிய காரியங்களை செய்யாதீர்கள், அந்தப் பெரிய காரியங்களைச் செய்யாமல் விட்டு விடவும் வேண்டாம், நீங்கள் பாருங்கள். ஏனென்றால், வார்த்தையானது..... வீடு அழிந்து போய் விடும், அதனோடு கூட ஜனங்களும் அழிந்து விடுவார்கள். ஆனால் தேவனுடைய வார்த்தையோ கடைசி நாட்களில் அவர்களை உயிரோடு எழுப்பி, நித்தியத்தை அவர்களுக்குக் கொடுத்து, மறுபடி அழிவில்லாத ஜீவனைக் கொடுக்கும். மேலும், இப்பொழுது, இவ்விதமான ஒரு ஆஸ்தியை உண்டுபண்ண வேண்டுமானால் (in order to), அது தேவனுடைய நித்திய வார்த்தை தான்! 82. அநேக வருடங்களுக்கு முன்பு, நாம் வழக்கமாக இங்கே பாடுகிற இந்தப் பழைய பாடலைக் குறித்து எண்ணிப் பார்க்கிறேன்: காலமானது விரைவான மாற்றங்களைக் கொண்டது, பூமியில் யாவும் மாயை, அசையாதவைகள் நித்தியமானவைகளில் உங்கள் நம்பிக்கையைக் கட்டுவீர், தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக்கொள்வீர்! நமது யாத்திரை முடியும்போது, நாம் தேவனுக்கு உண்மையாயிருந்தால், மகிமையில் நமக்கு அழகும் பிரகாசமுமான (பரம) வீடு உண்டே, ஆனந்த பரவசமாக்கப்பட்ட நமது ஆத்துமா அதைக் காணுமே. 83. சூரியன் அஸ்தமித்துக்கொண்டு இருந்தாலும், வெளியே நோக்கிப் பார்த்து, உங்களுடைய நரம்புகள் உங்கள் சரீரத்திற்குள் சில்லென்று குளிர்ந்து கொண்டிருந்து, உங்களுடைய பிள்ளைகள் படுக்கையைச் சுற்றிலும் நின்று கொண்டிருக்கும் போது, "தேனே, ஏதோவொரு நாளில், அப்பா மறுகரையில் உன்னைச் சந்திப்பேன்!" என்று கட்டப்பட்ட ஒரு ஞாபகச் சின்னத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதை அறியும் போது, அது எவ்வளவு மேலானதாக இருக்கிறது. நான் இன்னும் அதிகமாக அதையே கொண்டிருப்பேன். 84. மருத்துவர், "பில்லி, இன்னும் உமக்காக எதுவும் செய்ய முடியாது" என்று சொல்லும்போது. 85. என்னுடைய குழந்தைகளை நான் காண்கிறேன், நான் அவர்களுக்கு பிரியாவிடையாக முத்தம் செலுத்தி, ஆனால் அப்பா மரித்துக் கொண்டிருக்கவில்லை. நான் இளைப்பாறும்படியாக, ஒரு இடத்திற்குப் போகிறேன். 'இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்து போனாலும், எனக்கு ஏற்கனவே ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது'." வெளிப்படையாக பேசும்படிக்கு என்னவொரு ஞாபகச் சின்னம்! நான் என்னுடைய பிள்ளைகளின் முன்பு, "தேனே, எனக்கு இந்த வங்கியில், பத்து இலட்சம் டாலர்களும், இந்த ஒன்றில் பத்து இலட்சம் டாலர்களும் உங்களுக்காக உள்ளன" என்று கூறுவதைக் காட்டிலும், நான் அதைச் செய்யவே அதிகமாக விரும்புவேன். அந்த சாட்சியையே நான் விட்டுப்போக அதிகமாக விரும்புவேன். இறுதி பிரிவு நமக்குப் பின்னால் காலமென்னும் மணலில் அடிச்சுவடுகளை விட்டுச்செல்கின்றன; வேறொரு சகோதரன் வாழ்க்கை படகில் கப்பலின் பயபக்திக்குரிய முக்கிய பாயில் மிதந்து செல்கையில், கப்பல் சேதம் ஏற்பட்டு கதியற்ற நிலை அடையும்போது, இந்த அடிச்சுவடுகளைக் கண்டு, மறுபடியும் தைரியம் கொள்வான். முற்றிலுமாக! உங்களுடைய சாட்சிகளை, அவைகளை ஒரு ஞாபகச் சின்னங்களாக விட்டுச் செல்லுங்கள். 86. அதோ அங்கே படுத்துக் கொண்டிருக்கிற ஒரு வயதான மனிதரைக் குறித்து நான் எவ்வளவாக சிந்தித்துப் பார்க்கிறேன், அவர் அன்றொரு நாள், இந்த ஜீவியத்தில் தன்னுடைய கடைசி மணி வேளைகளில், என்னை அழைத்து, நான் தம்முடைய அடக்க ஆராதனையில் பிரசங்கிக்க விரும்பினார்; பால் ரேடரின் கூடாரம். அவர் தான் என்னுடைய நல்ல நண்பர், F. F. பாஸ்வர்த் அவர்கள், ஒரு தெய்வ பக்தியுள்ள பரிசுத்தவான் தம்முடைய சிருஷ்டிகரை சந்திக்கப் போய்க் கொண்டிருந்தார். அவர், "சகோதரன் பிரன்ஹாமே, என்னுடைய ஜீவியத்திலேயே இதுதான் மிக மகிழ்ச்சியான நேரம். நான் அவரைச் சந்திக்கப் போகிறேன் என்பதை அறியும்போது, நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன், இரவில் தூங்குவதே கஷ்டமாக இருக்கிறது என்றார். 87. நான் திருமதி. ஏமி மெக்பர்சன் அவர்களைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன், அவர்களை அவமதிக்கும்படி அல்ல, அவர்கள் ஒரு அற்புதமான பெண்மணியாக இருந்தார்கள். நான் இதிலும் அதிலும் கறைகளைக் காண்கிறேன். நான் ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் மற்றும் டாக்டர். பிறைஸ் மற்றும் அந்த மகத்தான மனிதர்கள் அநேகருடைய கறைகளைக் காண்கிறேன், ஆனால் F. F பாஸ்வர்த் அவர்களைக் குறித்து ஒரு கறையையாவது யாராவது எப்பொழுதாவது கூறினதை நான் கேட்டதில்லை. தேவனே, என்னுடைய முடிவு அதைப்போன்று இருக்கட்டும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையின் ஒரு ஞாபகச் சின்னமாக இருக்கட்டும். 88. இங்கே மேலே E. ஹோவர்ட் காடில் அவர்களைக் குறித்து எண்ணிப் பார்க்கிறேன், கொஞ்ச காலத்திற்கு முன்பு, அவர் குடிபோதையில் இருக்கிற ஒரு slot-ஆக தரையில் குறுக்கே கிடந்த போது, ஈக்கள் அவருடைய வாயில் மொய்த்தன. அதோ அங்கே கீழேயிருக்கும் அவருடைய அன்பான வயது சென்ற தாயார் ஜெபித்து, விசுவாசித்து, தன்னுடைய குடிகார மகனுக்காக தேவனைப் பற்றிக்கொண்டார்கள். அங்கே, அவர் உலகத்தை விட்டுப் போன போது, அவர் ஒரு சாட்சியையும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிருபையே போதுமானது என்ற ஒரு ஞாபகச் சின்னத்தையும் விட்டுச்சென்றார். தேவனுடைய வார்த்தையானது, ஜெபத்தில், அவருக்குள் வைக்கப்பட்டபோது, தேவன் அதற்காக பதிலளிக்க வேண்டியவராயிருக்கிறார். 89. தேவன் ஒரு சபையை ஞாபகச் சின்னமாக, அவருடைய பலியின் ஒரு ஞாபகச் சின்னமாக கட்டிக் கொண்டிருக்கிறார். கிறிஸ்து ஒருபோதும் வீணாக மரிக்கும்படி பூமிக்கு வரவில்லை. "தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை எழுப்ப வல்லவராயிருக்கிறார்." ஜனங்கள் அதில் ஜீவிக்காமல், அவர்கள் அதை எடுத்துக்கொள்ளாமல், அதைக் குறித்து சிந்திக்காமல், தேவன் அவர்களுக்குக் கொடுத்திருக்கிற வெகுமதி என்னவொரு மகத்தானது என்று உணர்ந்து கொள்ளாமலும் இருப்பார்களானால், தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை எழுப்ப வல்லவராயிருக்கிறார். உண்மையாகவே அவர் அதைச் செய்வார்! நான் அதைக் குறித்து சிந்தித்து, அவர் செலுத்த வேண்டியிருந்த மகத்தான கிரயத்தைக் குறித்து எண்ணிப் பார்க்கும்போது! இப்பொழுது நல்ல... 90. எல்லாமே இலவசமாக (வேண்டுமென்று எல்லாருமே விரும்புகிறார்கள், ஒவ்வொரு... விரும்புகிறார்கள். இன்று அமெரிக்கனுடைய வாழ்க்கைபாணி அதுவாகத்தான் இருக்கிறது. உங்களால் கூடுமான எல்லாவற்றையும் பணமின்றி பெற்றுக்கொள்ளும்படி விரும்புகிறார்கள். சகோதரனே, பணமின்றி, மதிப்புள்ள எதையும் நீங்கள் பெற்றுக்கொள்ள மாட்டீர்கள். நீங்கள் எதைப்பெற்றுக்கொள்கிறீர்களோ அதற்காக பணம் செலுத்துங்கள். அது சரியே. நீங்கள் அதற்குப் பணம் செலுத்தியாக வேண்டும், அது கிடைப்பதற்கரிய பெருமதிப்பு உடையதாக வருகிறது. 91. தேவனுக்கு, உங்களுடைய இரட்சிப்பு கிடைப்பதற்கரிய பெருமதிப்பு உடையதாகவே வருகிறது. அவருடைய ஒரேபேறான குமாரனே ஒவ்வொரு மனிதனுக்கும் நித்திய ஜீவனைக் கொடுத்து, அவனை சந்தோஷமாக்கி, இன்றிரவு, பயனுள்ள முறையில் ஜீவிப்பதற்கான காரியங்களுக்காக ஜீவிக்கும்படிச் செய்ய விலைகொடுத்தது (costs). நம்முடைய பிள்ளைகளுக்காக ஏதோவொன்றை விட்டுச் செல்வதற்கல்ல; நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இரட்சிப்பைக் காட்டிலும் விட்டுச்செல்லும்படியான பெரிய பரம்பரைச்சொத்து எதுவுமில்லை . நிச்சயமாக, அதுவல்ல. 92. இப்பொழுது, பெரிய கிரயம் செலுத்தப்பட்டது. நெடுங்காலமாக பரீட்சிக்கப்பட்டு, நல்லதென்று நிரூபிக்கப்படுவது (Time-testing) வந்து தோன்றியே ஆக வேண்டும். அது காலத்தால் பரீட்சிக்கப்பட்டு, நல்லதென்று நிரூபிக்கப்பட்ட ஞாபகச் சின்னமாக இருக்கிறது. எப்பொழுதாவது சரியென்று சோதிக்கப்பட்டிருக்கிற ஒரே ஞாபகச் சின்னம், தேவனுடைய வார்த்தையாகத்தான் இருந்து வருகிறது. ஓ, கடவுள் நம்பிக்கையற்ற நாஸ்திகர்கள் அதை அகற்றிப்போட முயற்சித்திருக்கிறார்கள். அவர்களால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்திருக்கிறார்கள், ஆனால் அது ஒருபோதும் ஒழிந்து போகாது. அது தவறிப்போக முடியாது. 93. ஆபிரகாம், அவன், "நீ சாராளாகிய அந்தப் பெண்ணின் மூலம் ஒரு குழந்தையைக் கொண்டிருக்கப் போகிறாய்" என்ற தேவனுடைய அந்த ஞாபகச் சின்னத்தை பெற்றுக்கொண்டபோது. அவன் 25 வருடங்கள் தன்னுடைய முழு இருதயத்தோடும் அதை விசுவாசித்து, அதற்கு முரணாயுள்ள எதையும் மறுத்தான், தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொள்வார் என்று அவன் அறிந்திருந்தான். 94. கடவுள் நம்பிக்கையற்ற நாஸ்திகர்கள், இன்று, அவர்கள் எழும்பி வேதாகமத்தை முற்றிலுமாக தோற்கடிக்க (smear out) முயற்சிக்கிறார்கள். உங்களால் வேதாகமத்தை நிறுத்த முடிவதற்கு முன்பு, நீங்கள் அதைச் செய்யக்கூடும் முன்பு, நீங்கள் நேரத்தை நிறுத்தியாக வேண்டும். ஒவ்வொரு கடவுள் நம்பிக்கையற்ற நாத்திக உலகமும் (atheotic world), ஒவ்வொரு கடவுள் நம்பிக்கையற்ற நாத்திக ஜனங்களும் (atheotic people), ஒவ்வொரு கம்யூனிஸ ஜனங்களும், அவர்கள் யாராயிருந்தாலும், ஒவ்வொரு புத்த, சமண, முகமதிய ஜனங்களும், ஒவ்வொரு நாளும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பைக் குறித்து சாட்சி கூற வேண்டியிருக்கிறது. நல்லது, நீங்கள் தேதியை எழுதும் ஒவ்வொரு முறையும், தேவன் தமது குமாரனை 1957 வருடங்களுக்கு முன்பு அனுப்பினார் என்று சாட்சிபகருகிறீர்கள். சகோதரனே. உன்னால் அதைச் செய்ய முடியாது. அது ஒருபோதும் செய்யப்பட முடியாது. வானங்களும் பூமியும் ஒழிந்து போகும், ஆனால் என்னுடைய வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்து (pass) போகாது." 95. கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் நியூயார்க்கில் இருந்தேன், அநேக வருடங்களுக்கு முன்பு, ஐக்கிய நாடுகளுக்கு பிரெஞ்சு அரசு மூலமாக கொடுக்கப்பட்டிருந்த சுதந்திர தேவி சிலையை (Statue of Liberty) நோக்கி, நான் வெளியே ஒரு சிறு தீவில் சென்றேன். கையில் ஒரு டார்ச் லைட் இருந்தது. நாங்கள் மேலே அந்த கையில் சென்றோம். அங்கே ஒரு ஜன்னல் இருக்கிறது. அங்கே இந்த மகத்தான வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருந்தது, அந்த பக்கத்தில் நெடுகிலும் ஒரு கூட்டம் சிட்டுக்குருவிகள் இருந்ததை நான் கவனித்தேன், அவைகள் எல்லாம் செத்துப்போய், அந்தப் பக்கத்தில் நெடுகிலும் கிடந்தன. நான் அந்த வழிகாட்டியிடம், "அந்தச் சிட்டுக்குருவிகள் எவை? அவைகள் மின்சாரம் பாய்ந்து செத்துவிட்டனவா?" என்று கேட்டேன். 96. "இல்லை, ஐயா. இந்தக் காலையில் இதுவரையிலும் நாங்கள் அவைகளை எடுக்கவில்லை. கடந்த இரவில், அங்கே ஒரு புயல் இருந்தது, இங்கேயிருக்கும் விரிகுடாவின் இடையே ஒரு பெரிய புயல் வந்தது" என்றார். நான், "ஆம், ஐயா. எனக்கு அது தெரியும்" என்றேன். 97. அவர், அந்தச் சிறு பறவைகள் அந்தப் புயலில் சிக்கிக் கொண்டன. அவைகள் இந்த வெளிச்சத்திற்குள் வந்தபோது, அவைகள் இந்த வெளிச்சத்தை தோற்கடிக்க முயற்சித்தன. பாருங்கள்? அவைகள் அப்படியே இந்தக் கண்ணாடியின் மேல் தாக்கி, மோதின. பாதுகாப்புக்காகப் போகும்படி இந்த வெளிச்சத்தை உபயோகிப்பதற்குப் பதிலாக, அவைகள் இந்த வெளிச்சத்தை தோற்கடிக்க முயற்சித்தன என்றார். 98. அப்போது உள்ளூக்கம் என்மேல் வந்தது. அது சரியே. தேவனுடைய வெளிச்சத்தை தோற்கடிக்க முயற்சிக்கும் மனிதர்களும் ஸ்திரீகளும், அப்படியே தங்கள் மூளைகளைத் தான் பலமுறை பலமாக இடித்துக்கொள்கிறார்கள். உங்களுடைய மூளைகளை பலமாக இடித்துக்கொள்வதற்குப் பதிலாக, ஏன் அவர்கள் அந்த வெளிச்சத்தை, அதை பாதுகாப்புக்குள் போக உபயோகிப்பதில்லை? அதை முயற்சி செய்து, அதை மறுதலித்து, அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன. தெய்வீக சுகமளித்தலைப் போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது, உண்மையான இரட்சிப்போ, இந்தக் காரியங்களோ கிடையாது" என்று கூறுகிறார்கள். அவர்கள் கம்பத்தின் மேல் மோதிக் கொள்ளுகிறார்கள். அவர்கள் அதைச் செய்யும் காலம் வரையில், தேவனுடைய மகத்தான சபையானது அதனால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு வேகமாக தொடர்ந்து மேல்நோக்கிப் போய்க் கொண்டு தான் இருக்கும். ஜனங்கள் எழும்பி, இதுவாகவும், அதுவாகவும் இருப்பதாக உருமைகோரி, தோல்வியடைகிறார்கள், மற்றும் அதைப்போன்று மற்றும் பலவாறாக ஆகிவிடுகிறார்கள். ஆனால் தேவனுடைய சபையோ தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறது, தேவனுடைய வார்த்தையோ தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. அவள் சரியான விதமான மூலப்பொருளினால் உண்டாக்கப்பட்டிருக்கிறாள். 99. கொஞ்ச காலத்திற்கு முன்பு, ஆஸ்திரேலியாவில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் இருக்கிற மகா ஆஸ்திரேலியா, அது தென் ஆப்பிரிக்காவைப் போன்று இருக்கிறது, ஆஸ்திரேலியாவுக்கு போகும் வழியின் குறுக்காக. சிட்னியில், அங்கேயிருக்கிற விரிகுடாவைச் சுற்றிலும் வருகிற ஒரு பெரிய பட்டணம் அங்கேயிருக்கிறது, அநேகமாக, நான் அறிந்ததைக் காட்டிலும் சகோதரன் பீலர் அவர்களுக்கு அதைக் காட்டிலும் அதிகம் தெரியும். எப்படியாகிலும், வடக்கு சிட்னிக்கும் தெற்கு சிட்னிக்கும் குறுக்கே ஒரு பாலத்தைக் கட்ட அவர்கள் விரும்பினார்கள். இந்தப் பாலத்தைக் கட்ட வரும்படி, கட்டிட கலைஞர்களையும், பாலம் கட்டுபவர்களையும் பெற்றுக்கொள்ளும்படி, தேசத்தின் ஒவ்வொரு பாகத்திலும் அழைப்பு விடுத்தார்கள். அவர்களில் யாருமே அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் அங்கே போன உடனே, அந்தக்கடலின் அடிப்புறம் அமிழ்ந்து போகும் மணல்கள் (shifting sands) இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அதன்மேல் எது கட்டினாலும் எளிதாக விழுந்து போகத்தக்க தளர்வான ஈர மணலாக (quick sands) அது இருந்தது, அதில் எதுவுமே நிற்காது. அவர்கள் அதை சோதனை செய்தும், ஆராய்ந்து பார்த்தும், அப்படியே தொடர்ந்து செய்து பார்த்து விட்டு, அவர்கள், "இல்லை, அப்படிப்பட்ட ஒரு பாலத்தைக் கட்ட முயற்சிப்பதற்கு ஏற்றுக்கொள்ளவும் கூடமாட்டோம். அதைக் கட்ட முடியாது" என்று கூறிவிட்டார்கள். 100. சற்று கழிந்து, மேலே இங்கிலாந்திலிருந்து ஒரு வாலிப் கட்டிட கலைஞன் வந்தான், அவன் பிரபலமானவனும், கீர்த்தியுள்ள மனிதனுமாயிருந்தான், அவனுக்கு ஒரு நல்ல பெயர் இருந்தது. 101. ஓ, எனக்கு அது பிடிக்கும்! நற்பெயருடைய ஒரு மனிதனை நான் விரும்புகிறேன். ஓ, நீங்கள் ஒரு பெரிய மனிதனாக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் ஒரு சந்தில் வாழும் பரம ஏழையாக இருந்தும், பெரும் அதிகாரம் உடைய இராஜாவைக் காட்டிலும் அதிக சிறப்பான நற்பெயரை உடையவர்களாக இருக்கலாம். முற்றிலுமாக. நீங்கள் பணக்காரனாக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் ஒரு நற்பெயரைக் கொண்டிருக்க முடியும். அது அறிவிக்கிறது, உங்களுடைய நற்பெயரும் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதும் நீங்கள் எப்படியிருக்கிறீர்களோ அப்படி உங்களை உருவாக்குகிறது. அது உங்களுக்கு உங்கள் நற்பெயரைக் கொடுக்கிறது. நீங்கள் உங்கள் நற்பெயரின் மூலம் அறியப்படுகிறீர்கள். 102. அற்புதமான ஒரு நற்பெயரை உடையவனாய் இந்த மனிதன் அங்கே சென்றான். அவன் நிலைமையை ஆராய்ந்து பார்த்தான். அவன் ஒரு சில நாட்களாக அந்தக் கரைகளில் நடந்தான். அவன் அதைக் கவனமாக ஆலோசித்துப் பார்த்தான். அவன் சோதனை செய்து பார்த்தான். அவன் ஆராய்ந்தான். அவன் சுற்றிலும் பார்த்தான். சற்று கழிந்து, அவன் அந்த மேயரிடம் சென்று, நான் இந்த வேலையை எடுத்துக்கொள்கிறேன்" என்றான். "ஏன்," அவர், "ஐயா, நீர் எதை ஏற்றுக்கொள்கிறீர் என்பது உமக்குத் தெரியுமா?" என்று கேட்டார். அவன், நான் முழுமையாக புரிந்துகொண்டிருக்கிறேன் என்றான். 103. அவர், "நல்லது, இந்த மகத்தான கட்டிட கலைஞர் சொல்லுகிறார்... அமெரிக்க கட்டிட கலைஞர்களும் உலகத்தின் எல்லாவிடங்களிலுமிருந்து வந்த கட்டிட கலைஞர்களும், பாலம் கட்டுபவர்களும் இங்கு வந்திருக்கிறார்கள், அவர்கள் இந்த வேலையைக் குறித்து பயப்படுகிறார்கள்" என்றார். 104. அவனோ, 'ஆனால், ஐயா, நான் இந்த வேலையைக் குறித்து பயப்படவில்லை. நான் இதை ஏற்றுக்கொள்வேன். ஒரு பாலம் கட்டுபவனாக, உலகளவில் எனக்கு நற்பெயர் இருக்கிறது என்பதை உணருகிறேன்; ஆனால் நான் அதைக் கட்ட முடியும் என்பதற்காக, நான் என்னுடைய நற்பெயரைக் கொண்டு பந்தயம் கட்டுகிறேன்" என்றான். ஓ, அவனுக்கு ஒரு தரிசனம் இருந்தது! ஒரு மனிதனால் ஒரு நற்பெயரை உண்டாக்க முடிவதற்கு முன்பு, அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைக் குறித்த ஒரு தரிசனத்தை அவன் கொண்டிருக்க வேண்டும். 105. ஓ, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! ஆகையால் தான் போகும்டியாக அங்கே ஒரு பரலோகம் இருக்கிறது. அந்த காரணத்தினால் தான், நம்மால் ஒரு கிறிஸ்தவனாக நற்பெயரைக் கொண்டிருக்க முடிகிறது, இந்தக் கட்டிடத்தில் மூலப்பொருள் இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். அது சரியே. இந்தக் கட்டிடத்தில் இருப்பது இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தான். அது சரியே. அவருடைய கறைபடிந்த இரத்தமானது எல்லா பாவங்களையும் கழுவி அகற்றுகிறது (washed away). நரகத்தின் சந்துக்களிலிருந்து அவர் என்னை எடுத்து, அவருடைய ஊழியக்காரனாக என்னை ஆக்கினார். அப்போது, நான் அவரிடத்தில் விசுவாசம் கொள்கிறேன். எனவே, நான் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு விசுவாசியும் அதைச் செய்திருக்கிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு நம்பிக்கை உண்டு, அவர்கள் இந்த மகத்தான கட்டுபவரிடத்தில் (Builder), இந்த மகத்தான கட்டிட கலைஞரிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிறார்கள். 106. இப்பொழுது, அந்த மனிதன் அதைச் செய்த போது, அவன் செய்த முதலாவது காரியம் என்னவென்றால், அவன் சரியாக இருந்து, அங்கே போயிருந்தான் என்ற நிச்சயத்தை உடையவனாய் இருப்பது தான். அவன், இப்பொழுது, நாம் இந்தப் பாலத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு, திடமான அஸ்திபாரத்திற்கு நாம் போயாக வேண்டும். நாம் அதற்கு போயாக வேண்டும்" என்றான். அந்த மணலின் கீழே அடியில், அங்கேயிருந்த பூமியின் நெஞ்சுப்பகுதியானது திடமான பாறையாக இருந்ததை அவன் அறிந்திருந்தான். மகத்தான பெரிய காற்றழுத்த விசைக்குழாய்களைத் தவிர அவனால் என்ன செய்ய முடியும்? அவன் அங்கே உள்ளே சென்று, கீழே பெரிய குழாய்களை அமைத்து, கீழே திடமான பாறை மட்டும் அது செங்குத்தாக ஊதித்தள்ளப்படும் வரையில், அவன் இந்த காற்றழுத்த விசைக்குழாய்களைக் கொண்டு அந்த சறுக்கும் மணல்களை (shifting sands) ஊதித்தள்ளி விட்டான். அவன் அந்தப் பாறையை அடைந்தபோது, அவன் இந்த மகத்தான பெரிய திருகாணிகளை (போல்ட்டுகளை) அங்கே உள்ளே பொருத்தி, அதை ஆயத்தம் பண்ணினான். அவன் ஒவ்வொன்றையும் பலமான காற்றைக்கொண்டு அகற்றிப்போட்டு விட்டான் (blowed out). 107. அதன்பிறகு, அவன் சென்று, அவனைச் சுற்றிலும் அவனால் கண்டுபிடிக்க முடிந்த மிகச் சிறந்த கட்டிட கலைஞர்களையும், மிகச் சிறந்த விஞ்ஞானிகளையும், மிகச் சிறந்த உபகரணங்களையும் அவன் வைத்திருந்தான். அவன் (ஆட்களை) அனுப்பி, தன்னுடைய பாலத்திற்காக உருக்கு எஃகுகளை வாங்கினான். அவன் அதைச் செய்தபோது, விஞ்ஞானப்பூர்வமாக பரிசோதனை செய்யப்படும் வரையில், அவன் ஒரு துண்டு எஃகு இரும்பையோ, ஒரு திருகாணியை (bolt) கூட பொருத்தவில்லை ; அங்கே அவர்கள் உருவாக்கி, வார்த்த அந்த வார்ப்பிடத்தில், அதற்குள் ஏதாவது காற்று வெடிப்பு இருக்கிறதா என்றும், அங்கே ஏதாவது சிறிய காற்று துளைகள் இருக்கிறதா என்றும் பார்க்கும்படியாக அவன் பரிசோதனை செய்து பார்த்தான், அது சரியாக பரிசோதிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கும்படியாக அதைச் செய்தான். ஓ, ஒரு பாலம் கட்டும் கட்டிட கலைஞராயிருந்த அவனுடைய நற்பெயருக்கு அது என்னவொரு - என்னவொரு ஞாபகச் சின்னமாக இருந்திருக்கும்.... 108. அந்தப்பாலம் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்வதற்காக, அவன் அவ்வளவு அதிகமான கஷ்டத்திற்குள் போயிருப்பான் என்றால், இந்த சபையானது பாதுகாப்பாக இருக்கிறது என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளும்படியாக, தேவன் எவ்வளவு கஷ்டத்திற்குள் போனார் என்று நினைக்கிறீர்கள்? ஆம், ஐயா. கிறிஸ்துவின் மரணத்தின் ஒரு ஞாபகச் சின்னம் அங்கே இருக்கிறது, அதுதான் அவருடைய சபை. சில ஜனங்கள் அதை ஜீவிக்க விரும்புவதில்லை, சில ஜனங்கள் விரும்புவார்கள். ஆனால், இது ஒரு சோதனை நேரமாக இருக்கிறது. தேவன் தம்முடைய ஞாபகச் சின்னங்களுக்காக, ஜனங்களை சோதனை செய்து கொண்டிருக்கிறார். அநேக நேரங்களில், ஜனங்கள், "நான் மிகவும் ஓ, சோதிக்கப்படுகிறேன்" என்று கூறலாம். 109. சோதனைகளுக்காக கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்! "நான் பலவீனனாய் இருக்கும்போதே, பலமுள்ளவனாய் இருக்கிறேன்" என்று பவுல் சொல்லியிருக்கிறான். "தேவனிடம் வருகிற ஒவ்வொரு குமாரனும் முதலில் நன்கு சோதிக்கப்பட்டு, சோதனை செய்து பார்க்கப்பட வேண்டும்." இந்தச் சோதனைகள் விலையேறப்பெற்ற பொன்னைப் பார்க்கிலும் உங்களுக்கு அதிக இனிமையாகவும் மதிப்பு வாய்ந்ததாகவும் இருக்கிறது. இது சோதனை நேரமாக இருக்கிறது. 110. அநேக நீண்ட வருடங்களுக்கு முன்பு, அவர்கள் உருக்கிப் பிரிக்கும் உலைக்களத்தைக் கொண்டிருப்பதற்கு முன்பு, அவர்கள் வழக்கமாக தங்கத்தை எடுத்து... அவர்கள் சரியானதா இல்லையா என்று எப்படி அவர்கள் அதை அறிந்து கொள்வார்கள், கசடுகள் எல்லாமும் அதற்கு வெளியே இருக்கும், எல்லா இரும்பு பைரைட்டும் (அதுதான் முட்டாளின் தங்கம்), எல்லா மதிகேடனும் அதற்கு வெளியே இருந்தான், அவர்கள்.... அடிக்கிறவன் அந்த தங்கத்தில் தன்னுடைய-தன்னுடைய பிரதிபலிப்பை காணும் மட்டுமாக, அவன் அதை அடித்து, மொத்து மொத்தென்று அடித்து, பிறகு அதை திருப்பி அடித்து, பிறகும் அதைத் திருப்புகிறான். 111. அந்தவிதமாகத்தான் தேவன் தம்முடைய சபைக்கும் செய்கிறார். கிறிஸ்துவின் ஜீவன் உங்களுடைய ஜீவியத்தில் பிரதிபலிக்கும் மட்டுமாக, சோதனைக்குப் பிறகு சோதனை, பரீட்சைக்குப் பிறகு பரீட்சை, சோதனைக்குப் பிறகு சோதனை, பரீட்சைக்குப் பிறகு பரீட்சையை அவர் உங்களுக்குக் கொடுக்கிறார்; நீங்கள் சமாதானம் உள்ளவர்களாகவும், தெளிந்த புத்தியுள்ளவர்களாகவும், சாந்த குணமுள்ளவர்களாகவும், கனிவான சாந்தமுள்ளவர்களாகவும், தாழ்மையுள்ளவர்களாகவும், ஆயத்தமுள் ளவர்களாகவும், அடக்கமுள்ளவர்களாகவும், விருப்பமுள்ள வர்களாகவும், உலகத்தின் காரியங்களிலிருந்து உங்கள் தலையைத் திருப்புகிறவர்களாகவும், நேராக கல்வாரியையே, அடித்துக் கொண்டிருக்கும் அந்த ஒருவரையே நோக்கிப் பார்க்கிறவர்களாகவும் ஆகும் வரையில் அவர் அவ்வாறு செய்கிறார். அநேக நேரங்களில் பற்றி எரிகிற அக்கினி சோதனைகளினிமித்தமாகவும், வியாதியினிமித்தமாகவும், துன்பங்களினிமித்தமாகவும், அது வினோதமாயிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அது உங்களைப் பரீட்சிக்க மாத்திரமே செய்கிறது, அழுக்கை உங்களை விட்டு அகற்றுவதற்காகவும், கசடை உங்களை விட்டு நீக்குவதற்காகவும், மந்தநிலையை உங்களை விட்டு அகற்றிப்போடுவதற்காகவும், நீங்கள் நோக்கிப் பார்த்து, பிரதிபலிப்பை காணக்கூடிய, அல்லது உங்களுக்குள் ஒரு மனிதன் கிறிஸ்துவின் பிரதிபலிப்பைக் காணக்கூடிய நிலைக்கு, "கிறிஸ்து உங்களுக்குள் மகிமையின் நம்பிக்கையாக இருக்கிறார்" என்பதைக் காணக்கூடிய நிலைக்கு உங்களை தூக்கத்தை விட்டு எழுப்பும்படியாகவும் மாத்திரமே அது செய்யப்படுகிறது. 112. அவன் ஒவ்வொரு துண்டையும் பரிசோதித்துப் பார்த்தான். முடிவாக, அவன்.... ஒரு திருகாணியை பொருத்துவதற்கு (put on) முன்பும், அவன் அதைப் பரிசோதித்துப் பார்த்தான். அவன் எல்லாவற்றையும் பரிசோதித்தான். 113. அதன்பிறகு அவன் எல்லாவற்றையும் செய்தபோது, பரிகசித்து கேலி செய்பவர்கள் அருகில் நின்று, இது தாக்குப்பிடிக்காது. இதனால் அதைச் செய்ய முடியாது" என்றார்கள். 114. இன்றும் அவர்கள் அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். "இங்கே நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் இந்த பரிசுத்த ஆவி மார்க்கமானது, அது நீடிக்காது, அந்த மரமானது அக்கினியினால் அழிக்கப்பட்டுப் போகும். ஆனால் அது அக்கினியினால் அழிக்கப்படாது. 115. ஓ, அக்கினியானது அதற்கு நீர்பாச்ச மாத்திரமே செய்கிறது. அது நமக்கு புதிய நம்பிக்கையை கொடுக்க மாத்திரமே செய்கிறது. அது மாத்திரமே - அது அதை பலப்படுத்த மாத்திரமே செய்கிறது; ஒவ்வொரு சோதனையும், பரீட்டையும் அதை மாத்திரமே செய்கிறது. ஒவ்வொரு தடவையும் காற்று ஒரு மரத்தின் மேல் அடித்து, அதை முன்னும் பின்னும், முன்னும் பின்னுமாக தள்ளும் போது, அது வேர்களை தளர்த்த மாத்திரமே செய்கிறது, அப்போது அதனால் ஆழமாக வளர்ந்து, இன்னும் அதிகமாக பற்றிப்பிடித்துக்கொள்ள முடியும். வியாதியானது உங்கள் வீட்டைத் தாக்கும் ஒவ்வொரு முறையும், அண்டை வீட்டார் உங்களைக் குறித்து எதையாவது மோசமாக பேசும் ஒவ்வொரு முறையும், அது உங்களை அசைக்க மாத்திரமே செய்து, உங்களை தளர்த்துகிறது, அப்பொழுது உங்களால் முழங்கால்படியிட்டு (get down), தேவனுடைய அசைக்க முடியாத வார்த்தையின் நித்திய கன்மலையின் மேல் நன்றாகப் பற்றிப்பிடித்துக் கொள்ள (get a hold on) முடிகிறது. அவ்வாறு தான் தேவன் அதைச் செய்கிறார். உங்களை சோதிக்கவும், உங்களை நிரூபிக்கவும், முன்னும் பின்னும் அசைக்கவும் (shake up), ஒரு புதிய பிடிமானத்தை உங்களுக்குக் கொடுக்கவுமே அவர் அந்த சோதனைகளை அனுப்புகிறார். 116. அதன்பிறகு நாம் இதைக் கண்டுகொள்கிறோம், அவன் அந்த எல்லாவற்றையும் செய்தபோது, குற்றம் கண்டுபிடிப்பவர்கள் அருகில் நின்று, "அது கிரியை செய்ய முடியாது" என்று கூறினார்கள். ஆனால் என்ன? அந்தக் கட்டிட கலைஞன் தன்னுடைய பாலம் தாங்கிப் பிடித்துக்கொள்ளும் என்பதை அறிந்திருந்தான். அது பிடித்துக்கொள்ளும் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது, ஏனென்றால் அது சோதனை செய்யப்பட்டிருந்தது. 117. ஆகையால் தான் தேவன், "கறைதிரையற்ற ஒரு சபையை நான் கொண்டிருப்பேன்" என்றார். ஆமென். அவள் சோதனையினூடாகப் போயிருந்தாள். தேவனிடம் வருகிற ஒவ்வொரு பிள்ளையும் சோதிக்கப்பட்டாக வேண்டும். 118. அந்த ஞாபகார்த்த நாளில், அவர்கள் - போவதாக இருந்தபோது, இருபுறங்களிலும், இரண்டு பக்கங்களிலிருந்தும் தொடங்கி, அவர்கள் அந்த விரிகுடாவின் நடுவில் சந்தித்த போது, அதைக் கட்டியிருந்த அந்த மனிதன், அவன், "நான் எந்த மனிதனையும் கேட்டுக்கொள்ள மாட்டேன்" என்றான். 119. அந்தக் கட்டிட கலைஞர்கள் எல்லாரும் சுற்றிலும் நின்று, எந்த அதிர்வாவது அந்தப் பாலத்தை தாக்கின உடனே, அது நேர் சரியாக கீழே போய் விடும். அது ஆபத்தானதாய் இருக்கும்" என்றார்கள். எந்தக் காப்பீட்டு நிறுவனமும் அதன்பேரில் அவனுக்குக் காப்பீடு கொடுக்கவில்லை. 120. அவனுக்கு எந்தக் காப்பீடும் அவசியமில்லை . அவன், "என்னுடைய பாலம் தாங்கிப் பிடித்துக்கொள்ளும்" என்றான். அவனுக்கு நம்பிக்கை இருந்தது. இப்பொழுது, அவன் நிச்சயமாக அதை சோதித்துப் பார்க்க வேண்டும், ஏனென்றால் அவனுடைய நற்பெயருக்கு பந்தயம் கட்டப்பட்டிருக்கிறது. நிச்சயமாகவே, அது இருக்கிறது. அது தாங்கிப் பிடித்துக் கொள்ளுமானால், அது ஒரு ஞாபகச் சின்னமாகவே இருந்திருக்கும். 121. அந்தக் காரணத்தினால் தான், தேவனே, அந்த பழங்கால, அசலான இரட்சிப்பானது தாங்கிப் பிடித்துக்கொள்ளும் என்பதை நான் அறிவேன்: கிறிஸ்துவின் நற்கீர்த்தி அதில் இருக்கிறது. அதிலிருந்து ஏதோவொரு சபையைக் கட்டுவதற்கோ, மனிதனால் உண்டாக்கப்பட்ட வேதசாஸ்திரத்தையோ, அவர் நமக்குக் கொடுக்க மாட்டார், ஏதோவொரு பள்ளி அனுபவத்தின் மேலோ, அல்லது, அவர்கள் கட்ட விரும்புகிற ஏதோவொரு வேதாகமக் கல்லூரியைக் கட்டுவதோ, இந்தக் காலையில் பிரங்கிமார்களுக்கு கல்விபுகட்டுவதற்கோ அல்ல. உண்மையான பிரங்கியானவன் தேவனுடைய கிருபையின், தேவனுடைய அழைப்பின் வேதாகமப் பள்ளியிலிருந்து வருகிறான், அது காலத்தால் பரீட்சிக்கப்பட்டதாக இருக்கிறது. அது சரியே. அது தாங்கிப் பிடித்துக்கொள்ளும். தேவன் உங்களிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார். நாம் அவரிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அந்தப் பாலமானது... பழங்கால கவிஞன் இவ்வாறு கூறுகிறான்: என் நங்கூரம் திரைக்குள்ளே பற்றிப்பிடித்திருக்கிறது. ஒவ்வொரு உயரமான, கடும் புயல்காற்றிலும், என் நஞ்கூரம் திரைக்குள்ளே பற்றிப்பிடித்திருக்கிறது. 122. எது பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியாது, ஆனால் ஏதோவொன்று பற்றிப்பிடித்திருக்கிறது. அது சரியே. அவள் அதோ அங்கேயுள்ள துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சப்பட்டிருக்கிறாள். ஒரு மனித இருதயத்தை பற்றிப்பிடித்திருக்கும் இரட்சிப்பின் ஒரு கயிறு அங்கேயிருக்கிறது, எப்பொழுதுதாவது மறுபடியும் பிறக்கும் ஒரு மனிதன் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான். அவன் அதை சந்தேகிக்கும்படி செய்ய நரகத்திலுள்ள எல்லா பிசாசுகளாலும் முடியாது. அங்கே அதனுள்ளே ஏதோவொன்று பற்றிப் பிடித்திருக்கிறது. அது ஆடி அசையட்டும்! அது குலுங்கட்டும்! ஆமென். அவள் ஒவ்வொரு முறையும் பற்றிப்பிடித்துக்கொள்வாள், ஏனென்றால் அது கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறது. 123. அதன்பிறகு இந்த மனிதன், "நான் யாரையும் கேட்க மாட்டேன், ஆனால், நானே போகிறேன்" என்றான். 124. அந்தப் பட்டணத்தின் மேயர் வெளியில் நடந்து வந்து, "மிஸ்டர், நிச்சயமாவே உங்கள் பாலத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு" என்றார். 125. அதற்கு அவன், "என்னுடைய பாலத்தில் உமக்கு நம்பிக்கை இருக்குமானால், என்னைப் பின்தொடர்ந்து வாரும். சரி, நாம் அதை ஒரு சோதனைக்கு உட்படுத்துவோம்" என்றான் 126. மேயர், "என்னுடைய காரானது அங்கே அந்தக் குறிப்பிட்ட காலையில் நின்றிருக்கும். நான் உம்மோடு கூட வருவேன்" என்றார். 127. இரயில்பாதை நிறுவனமும் அழைக்கப்பட்டிருந்தது, (அவர்களும்) சொல்லி, அழைத்து, ஐயா, நாங்கள் உங்கள் பாலத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். நாங்கள்..." என்றார்கள். 128. "என்னுடைய பாலத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்குமானால், முழுவதும் நிரம்பிய நான்கு ரயில் என்ஜின்களைக் கொண்டுவந்து, அந்தப் பாலத்தின் மேல் அவைகளை வையுங்கள். உங்களுக்கு நம்பிக்கை இருக்குமானால், என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். அது பரீட்சிக்கப்பட்டு, சோதிக்கப்பட்டு இருக்கிறது என்று நீங்கள் நம்பி, நீங்கள் அதை நம்புவீர்களானால், வந்து, என்னோடு கூட செல்லுங்கள்" என்றான். 129. அவனுடைய தைரியத்தைக் காண அநேக ஜனங்கள் அவனுக்குக் கடிதங்களை எழுதினார்கள். மனிதர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்றால், தைரியமுள்ள மனிதர்களைத் தான், ஒரு சிறிய நிச்சயமற்ற ஏதோவொன்றை அல்ல. 130. உங்களால் கவனிக்கப்படாமல் இருக்க முடியும் என்று நினைத்து, சபைக்குச் சென்று, எப்போதாவது "ஆமென்" என்று கூறி, சிறிய சத்தமிடுவதன் மூலமாக, உங்களுடைய பெயரைப் புத்தகத்தில் எழுதி, திரும்பிச் சென்று, பிசாசைப் போன்று ஜீவிக்கலாம் என்று நீங்கள் நினைப்பீர்களானால், உங்களுடைய சொந்த கிரியைகளே நீங்கள் யாரென்று நிரூபிக்கிறது. உங்களுடைய குணாதிசயம் அதை நிரூபித்து விட்டது. ஆனால் தேவன்.... 131. தைரியசாலிகளான மனிதர்களைக் காணவே உலகம் விரும்புகிறது, இயேசு கிறிஸ்துவின் இரட்சிக்கும் கிரிபையின் ஒரு ஞாபகச் சின்னமாக சிறப்புமிக்கவனாய், தைரியத்தோடு கூட இருக்கும் யாரோ ஒருவரை தான் உலகம் விரும்புகிறது. அது சரியே. 132. அந்தப் பாலமானது துவக்கி வைக்கப்படும் அந்த நாளில், மற்றவர்கள் திரும்பி வந்து, "ஆயத்தமாகுங்கள். உங்கள் புகைப்படக்கருவிகளை ஆயத்தமாக வைத்திருங்கள்." என்று அவர்கள் சொன்னார்கள், நிருபர்களும், அதற்குக் காரணம் அந்தப் பாலம் விழுந்து விடும்" என்று கூறினார்கள். 133. அந்த வாலிபன் அங்கே அந்தப் பாலத்தின் மேல் நடந்து சென்று, தன்னுடைய காரை நிறுத்தி, திரும்பி கீழே பார்த்தான், அந்த ரயில் எஞ்சின்கள் எல்லாமே வரிசையாக நின்றிருப்பதை அவன் கண்டான், அங்கே மேயர் அவனைப் பார்த்து கையசைப்பதைக் கண்டான். அவன் நோக்கிப் பார்த்தபோது, பத்தாயிரக்கணக்கான காலால் நடந்து வரும் மனிதர்கள் அங்கே பின்னால் நின்று கொண்டிருப்பதை அவன் கண்டான், அவர்கள் அவனோடுகூட அணிவகுத்துச் செல்ல ஆயத்தமாயிருந்தார்கள். "இசைக்குழு பாடத் தொடங்கலாம்" என்றான். சகோதரனே, அந்த இசைக்குழுக்கள் இசைத்துக் கொண்டிருந்து, விசில்கள் ஊதப்பட்டு, ஊதுகுழல் சப்தங்கள் போகப்போன போது, அங்கே ஒரு பயங்கரமான அதிர்வு உண்டாயிருக்கும் என்று கருதுகிறேன். ஆனால் அவனோ அந்தப் பாலத்தைக் கடந்து நடந்து சென்றான், அந்தப் பாலம் அசையவேயில்லை. ஏன்? அவன் முன்னணியில் சென்றான், ஏனென்றால் அது விழப்போவதாக இருந்தால், அவனும் அதனோடு கூட விழட்டும். 134. இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து, மகிமையிலிருந்து வந்தார்; மகிமையிலிருந்து, இங்கே கீழே, ஒரு சபையைக் கட்டும்படி வந்தார். அதில் பொருத்தப்பட்டிருக்கும் மூலப்பொருளானது காலத்தினால் பரீட்சிக்கப்பட்ட மூலப்பொருளாய் இருந்தது. நீங்கள் பீடத்தண்டை வந்து, ஒரு அறிக்கையை செய்யலாம், ஆனால் நீங்கள் காற்றுத் துளைகளையும் மற்ற எல்லாவற்றையும் கண்டுபிடிக்கும் போது, உலகமானது - உலகமானது உங்களுக்குள் முட்டைப்புழுக்களையும் மற்றவைகளையும் போட்டுவிடும், உங்களால் நிற்க முடியாது. அவர் உங்களை ஒருபக்கமாக தார்பூசுகிறார் (pitches). காலத்தால் பரீட்சிக்கப்பட்ட ஒரு சபையையே தேவன் விரும்புகிறார்; இன்று கிறிஸ்தவனாக இருந்து, நாளைக்கு பின்வாங்கிப்போன ஒருவனாக இருக்கும் யாரோ ஒருரோ, உள்ளேயும் வெளியேயும் இருக்கும் யாரோ ஒருவரோ, சிலசமங்களில் நல்லவனாகவும் சிலசமயம் கெட்டவனாகவும் இருக்கும் யாரோ ஒருவர் அல்ல. (அப்படியானால்) அவர் உங்களை ஒரு இடத்திலும் பொருத்த மாட்டார். 135. ஆனால் சோதிக்கப்பட்டு, சோதனைகளினூடாகவும், இழப்புகளினூடாகவும், வியாதியினூடாகவும், துக்கத்தினூடாகவும், மரணத்தினூடாகவும் போயிருந்தாலும், இன்னும் ஒரு சாட்சியோடு நிற்கிற ஒரு சபை அவருக்குண்டு. ஆமாம், அவனைத்தான், அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மனிதன் அவன்தான். நீங்கள் பரம ஏழையாயிருக்கிறீர்களா என்பது எனக்குக் கவலையில்லை. நீங்கள் பிச்சைக்காரனாக இருக்கிறீர்களா என்பதும் எனக்குக் கவலையில்லை. கந்தைத்துணிகளை பொறுக்கி அதை விற்கும் ஒருவராக நீங்கள் இருக்கிறீர்களா என்பதும் எனக்குக் கவலையில்லை. நீங்கள் யாராயிருந்தாலும், தேவன் உங்களுக்கு பரீட்டை வைக்கிறார். அவர் காலத்தால் பரீட்சிக்கப்பட்ட மூலப்பொருளுக்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார். நான் நம்புகிறேன், இந்நாட்களில் ஒன்றில், அந்த மகத்தான சபையானது.... 136. "அது எப்படி காணாமல் போக (lose) முடியும்? புவிஈர்ப்பு விசை உங்களை பூமியோடு பிடித்துவைத்திருக்கிறதே" என்று கூறலாம். 137. இப்பொழுது நான் பக்தி பரவசப்படுகிறேன். நான் உங்களிடம் கூறட்டும். [சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை ஆறு தடவைகள் தட்டுகிறார் - ஆசிரியர்.) ஏதோவொரு நாளில் காலத்தால் பரீட்சிக்கப்பட்ட அந்த சபையானது எழும்பும். இன்னும் ஒருமுறை பிரசங்கபீடத்தைத் தட்டி, அதன்பிறகு தமது கரங்களை ஒன்றாக ஒருமுறை தட்டுகிறார்.) அங்கே ஒருக்கால் அவர்களில் பாதிபேர் பூமியின் புழுதியில் நித்திரை செய்து கொண்டிருக்கலாம். அவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் முழுவதும் பரீட்சிக்கப்பட்ட தம்முடைய மூலப்பொருளை தேவன் உடைவராயிருக்கிறார். ஒருநாள் அவர்: "என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்" என்றபடி, முன்னணியில் போகும்படியாக அவர் வந்து, சரியாக வளிமண்டலங் களினூடாகவும், அடுக்கு மண்டலங்களினூடாகவும், கோள மண்டலங்கிளினூடாகவும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய பிரசன்னத்திற்குள் காலத்தால் பரீட்சிக்கப்பட்ட ஒரு சபையோடு கூட அவர் போவார். அது அவருடைய கிருபைக்கு ஒரு ஞாபகச் சின்னமாக இருக்கிறது; தேவன் அவருக்குக் கொடுக்கிற ஒரு ஞாபகச் சின்னமாக அது இருக்கிறது. 138. "என் பிதா ஒருவனை முதலில் இழுத்துக்கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான்." கிறிஸ்துவிடம் வருகிற ஒவ்வொரு மனிதனும் தேவனிடமிருந்து வருகிற ஒரு அன்பின் வெகுமதியாக இருக்கிறான், கிறிஸ்து அவனை சோதனைக்கு உட்படுத்துகிறார். அவன் சோதனையைத் தாங்கி நிற்பான் என்றால், அந்தப் பாலத்தில் அவர் அவனை வைத்து, அவனை இறுக்கி திருகிப் பொருத்தி (tightens down), அவனுக்கு ஒரு ஸ்தானத்தைக் கொடுத்து, அவனை அங்கே வைத்து, முடிவு பாதை மட்டுமாக அவன் பிடித்துக்கொள்வான் என்பதை அறிந்திருக்கிறார். ஆமென். காலத்தால் பரீட்சிக்கப்பட்ட மூலப்பொருள்! 139. "இந்தப் பாறையின் மேல்," ஏதோவொரு மதவெறித்தனத்தின் பாறையின் மேல் அல்ல, ஒரு கூட்டம் உணர்ச்சிவசப்படுதலின் மேல் அல்ல, ஒரு கூட்டம் சபை வேதசாஸ்திரத்தின் மேல் அல்ல, ஏதோவொரு ஸ்தாபனத்தின் மேலுமல்ல. ஆனால், "இந்தத் திடமான பாறையின் மேல்," கிறிஸ்துவின் வார்த்தை, "நான் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை ஒருபோதும் மேற்கொள்ள முடியாது." அது அங்கேயிருக்கும். 140. அது தூதர்களின் பிரசன்னத்தில், அவருடைய கிருபையின் ஒரு ஞாபகச் சின்னமாக இருக்கும். தூதர்கள் ஒரு நாள் அவரிடம், "நீர் ஏன் பூமிக்குப் போகிறீர்?" என்று கேள்வி எழுப்பினபோது. அவர் திரும்பி வந்து, குற்றமில்லாமலும், கறைதிரையில்லாமலும் இருக்கிற அந்த சபையை அளிப்பார். அங்கே தான் அந்த மூலப்பொருள் இருக்கிறது. அங்கே தான் காரியம். அவருடைய நற்பெயர். அவர் நிச்சயமாக அதைச் செய்யத்தான் வேண்டும். அந்த பாலம் கட்டுபவன் அந்தப் பாலத்தை கட்ட வேண்டியிருந்தது; அவன் அதைச் செய்தே தீர வேண்டும், அல்லது அவனுடைய நற்பெயரை இழந்து போவான். கிறிஸ்து ஒரு சபையை கொண்டிருப்பார், அவர் நிச்சயமாக அதைச் செய்ய வேண்டும். ஏனென்றால், அவர் பூமிக்கு வந்து, மாம்சமாகி, நமது மத்தியில் வாசம் பண்ணினார்; நாம் நீதியுள்ளவர்கள் ஆகும்படி, அவர் பாவமானார். அவருடைய கிருபையினால், நாம் அவராகும்படி, அவர் நாமானார். ஒரு பாவியாக, நம்முடைய இடத்தை எடுக்க அவர் வந்தார்; அவருடைய மகத்துவத்தின் பிரசன்னத்தில், தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாக, நாம் அவருடைய இடத்தைக் கொண்டிருக்கும்படி அவர் அனுமதிக்க அவ்வாறு செய்தார். தேவனுடைய என்னவொரு கிருபை! 141. நாம் எப்படி, "அந்த வார்த்தைகள் சரியல்ல?" என்று கூற முடியும்? வானங்களும் பூமியும் ஒழிந்து போகும், ஆனால் அந்த வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்து போகாது (pass). 142. ஒரு சில இரவுகளுக்கு முன்பு, ஒரு சிறு குருடான இந்தியப் பையன், அவனுக்கு மூன்று - மூன்று அல்லது நான்கு வாரங்கள் வயதிருப்பது முதற்கொண்டே குருடாயிருந்து, தன்னுடைய பார்வையைப் பெற்றுக்கொண்டான், அவன் சுகமடைந்து, மேடையை விட்டு வெளியே நடந்து சென்றான். அது என்னவாக இருந்தது? அது காலத்தால் பரீட்சிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வல்லமை மற்றும் கிருபையின் ஞாபகச் சின்னங்கள் சின்னங்களாக இருந்தன. அவருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்! 143. காலத்தால் பரீட்சிக்கப்பட்டது! சோதனைகள், தோல்லைகள், குலுக்கங்கள், இழுப்பு, அது உங்களுக்குள் விரிசல் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கவும், அங்கே ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க மாத்திரமே ஆகும். தேவன் உங்களை அசைத்து, சோதிப்பாரானால். 144. கொஞ்ச காலத்திற்கு முன்பு, மகா அகஸ்டா ராயன் (Caesar Augusta), ஒரு மகத்தான பிரபலமான யுத்தத்திற்குப் பிறகு, ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றிருந்தான், அவன்... அவர்கள் ரோமாபுரியில் ஒரு கொண்டாட்டத்தை அவனுக்குக் கொண்டாடப் போவதாக இருந்தனர். அவன் அவர்களிடம், "நான் இதைச் செய்து கொண்டிருக்கையில், ஏதோவொரு மனிதன், ஏதோவொரு தகுதியான மனிதன், என்னுடைய பக்கத்தில் சவாரி செய்ய, குதிரையில் சவாரி செய்ய விரும்புகிறேன். ஏதோவொரு மனிதன் என்னோடு கூட இந்த ஆசீர்வாதங்களை பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்" என்றான். எல்லாரும்.... அது பாளயத்தினூடாகச் சென்றது. எல்லா அதிகாரிகளும் கனத்தின் அடையாளமான இறகை நேர்த்தி செய்து, தங்களுடைய பட்டயங்களை மெருகேற்றி, தங்களுடைய போர்கவசங்களை மிகவும் பிரகாசமாக ஆக்கினார்கள் மற்றும் எல்லாவற்றையும் செய்து, நேராக நின்று, தங்களுடைய இராஜாவுக்கு ஒரு குறிப்பிட்ட (விதத்தில்) வணக்கம் தெரிவிக்கும்படியாக (salute) பயிற்சி எடுத்துக்கொண்டார்கள். 145. அவன் அங்கே வெளியே தன்னுடைய சிங்காசனத்தில் அமர்ந்து கொண்டு, கவனித்துக் கொண்டிருக்கையில், ஒவ்வொருவரும் மேலே நடந்து வந்தார்கள், தங்களுடைய பெரிய போர்கவசம் அவனுக்கு முன்பாக இருந்தது. தன்னுடைய பெரிய, அருமையான, கனத்தின் அடையாளமான இறகோடும், மிகவும் மெல்லிய கூர்மையான முனையை உடைய அதை உடைய அதிகாரி நின்று, அவனுக்கு வணக்கம் செலுத்தினான். இராயன் தன்னுடைய தலையை அசைக்க, அவன் அங்கிருந்து சென்றான். மற்றொருவன் மேலே வந்து, தன்னுடைய வணக்கத்தை (salute) செலுத்தினான். இராயன் தன்னுடைய தலையை அசைக்க, அவன் அங்கிருந்து சென்றான். மீண்டும் மீண்டுமாக, ஒரு போர்வீரனுக்குப் பின் மற்றொரு போர்வீரனாக வந்து போய்க் கொண்டிருந்தார்கள். 146. இறுதியாக, கீழே அந்த வரிசையின் பக்கமாக, ஒரு சிறு காலாட்படை வீரன் வந்தான். மெருகேற்ற அவனிடம் எந்த கேடயமும் இல்லாதிருந்தது. நேர்த்தியாக கத்தரித்து விடும்படியாக கனத்தின் அடையாளமான இறகும் அவனிடம் இல்லாதிருந்தது. ஆனால் அவன் இராயனின் முன்பு மேலே நடந்து வந்தான். சரியான விதமான சல்யூட் செய்வது எப்படி என்றும் கூட அவனுக்குத் தெரியாதிருந்தது, ஆனால் அவன் அப்படியே தன்னுடைய தலையைத் தாழ்த்தி, அங்கிருந்து நடந்து சென்றான். 147. இராயன், "சற்று பொறு. நீ யார்? இங்கே திரும்பி வா" என்றான். அவன் அங்கே மேலே வந்தான். அவன் இவனைப் பார்த்தான். அவனுடைய முகத்தில் காயத்தின் தழும்புகளும், வெட்டுகளும் உடையவனாய், உருக்குலைந்து போனவனாகவும், முடவனாய் நொண்டினவனுமாய் இருந்தான். "அந்தத் தழும்புகள் உனக்கு எங்கிருந்து கிடைத்தது?" என்று கேட்டான். அவன், "யுத்தத்தில், என்னுடைய ஆண்டவனாகிய இராயனுக்காக சண்டையிட்டபோது என்றான். 148. "இங்கே மேலே ஏறிவந்து, என்னுடைய பக்கத்தில் உட்கார். பரீட்சிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டிருக்கிற ஒருவன் நீ தான்" என்று சொன்னான். 149. சகோதரனே, இது சிறகுகளை நேர்த்தியாக கத்தரித்து விடும் நேரம் அல்ல, இது கல்வி கற்கும் நேரமும் அல்ல. இது நேரம் - இது சோதனையின் நேரமாக இருக்கிறது. கடினமாக சோதனைகளிலும், சண்டைகளிலும், யுத்தங்களிலும் உண்டான யுத்த தழும்புகளைக் காணும்படியாக தேவன் தம்முடைய சபையைச் சோதித்துக் கொண்டிருக்கும் ஒரு நேரமாக இது இருக்கிறது. அவன் தான் அவருடைய பக்கத்தில் அமர்ந்து சவாரி செய்வான். 150. எலிசா தீர்க்கதரிசியின் அங்கியை அணிந்து கொள்ளக் கூடும் முன்பு, அவன் எப்படியாக பரீட்சிக்கப்பட்டு நிரூபிக்கப் பட்டிருந்தான்! எலிசா எப்படியாக அந்த அங்கியை தன்னுடைய தோளைச் சுற்றிலும் போட்டுக்கொண்டான்! அவன் எப்படிப்பட்ட சரியான மனிதனாக இருந்திருக்க வேண்டும்! அவன் உழுது கொண்டிருந்த போது, எலிசா அவனை அங்கே கவனித்தான். தேவன், "அதுதான் அந்த மனிதன். அந்த வஸ்திரத்தைத் தரிக்கக் கூடிய மனிதன் அவன்தான். அவன் உன்னுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொள்வான்" என்றார். 151. கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்! அவர் எதைக் குறித்து பேசினாரோ அந்த அங்கியை உடுத்துகிற ஏதோவொரு மனிதனைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும்படி, சகலத்தையும் காண்கிற அவருடைய கண்ணானது எப்படியாக பூமியின் மேல் அசைந்து கொண்டிருக்கிறது. அதற்கு அவர், "நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா? உங்களால் கூடும்," என்று கூறினார். 152. எனவே, நாம் இன்று, அந்த சபையாகிய நீங்கள் கிறிஸ்துவின் அங்கியை உடுத்த வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள்; நாம் அந்த நாளில் குற்றமற்றவர்களாய் நிற்கும்படி, கிறிஸ்துவின் சர்வாயுதவர்க்கத்தையும், முழு கேடகத்தையும், கேடயத்தையும், கவசத்தையும் தரித்துக்கொள்வோம். அவர், "அதோ என்னுடைய ஊழியக்காரன். நான் அவனை பரீட்சித்து விட்டேன். நான் அவனை சோதித்திருக்கிறேன். நான் யோபைப் போன்று, அவனுக்குக் கடினமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறேன். அவன் இன்னும் நூறு சதவீதம் நிரூபித்துக் கொண்டிருக்கிறான்" என்று கூறக் கூடும் வண்ணமாக, காலத்தால் பரீட்சிக்கப்பட்ட ஞாபகச் சின்னங்களை அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். நாம் தேவனை அவருடைய வார்த்தையில் எடுத்து, காலத்தால் பரீட்சிக்கப்பட்ட ஞாபகச் சின்னங்களாக இருக்கக் கூடும்படி, தேவன் நம்மேல் இரக்கமுள்ளவராயிருப்பாராக. நாம் ஜெபிப்போம். 153. ஸ்தோத்தரிக்கப்பட்ட பிதாவே, மகா பரிசுத்த தேவனே, காலத்தால் பரீட்சிக்கப்படுவதற்காகவும், ஒவ்வொரு சோதனைக்காகவும், எங்கள் இருதயங்களின் மிக ஆழத்திலிருந்து நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் அவைகளைக் குறித்து மோசமாக உணரவில்லை, கர்த்தாவே, ஆனால் இந்த மகத்தான சோதனையின் நேரங்களினூடாக எங்களுக்கு உதவி செய்ய உமது கிருபை போதுமானதாக இருப்பதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 154. அந்த மனிதனைப் போல, இன்றிரவு அவன் குறிப்பிடப்பட்ட போது, அது சபையாரை எப்படியாக சிலிர்ப்பூட்டினது, ஆச்சரியமான கிருபை, நாம் அந்தக் குறிப்பிட்ட பாடலைப் பாடும்போது. ஆனால் அநேக ஆபத்துகள், கடினவேலை, கண்ணிகள் மூலம், ஏற்கனவே கடந்து வந்து விட்டேன்; கிருபையே என்னை இம்மட்டாய் பத்திரமாய் கொண்டு வந்தது, கிருபையே என்னை மேலும் கொண்டு செல்லும். 155. ஓ, அது ஜனங்களுடைய இருதயத்தை சிலிர்ப்படையச் செய்தது! அது இன்றிரவு செய்தியோடு கூட வரிசைப்படுத்திக் கொண்டிருந்தது என்று நம்புகிறோம், அது ஆபத்துகளினூடாகவும், கடும் உழைப்பினூடாகவும், கண்ணிகளினூடாகவும் காலத்தால் பரீட்சிக்கப்படும் ஒரு பரீட்சையாக இருந்தது. இப்பொழுது தன்னைத்தானே பரிசோதித்து, தேவனுடைய கிருபையினாலே, தான் உண்மையுள்ளவனாக நின்றிருக்கிறான் என்று அறிந்திருக்கிற ஒருவனாகிய கிறிஸ்தவனுக்கு அது உதவிகரமாக இருக்க வேண்டியதாய் இருந்தது. விழுந்து போய், மேடுபள்ளமான ஜீவியத்தை உடையவர்களாய், கவலையற்றவர்களாய், தள்ளாடுகிற ஜீவியத்தை ஜீவிக்கிறவர்களாய் இருக்கிறவர்களும் அது அவமானத்தைக் கொண்டுவர வேண்டிதாய் இருந்தது. ஓ தேவனே, யுத்தத்தைக் காண்பிக்க ஒரு யுத்த தழும்பு கூட இல்லை. கர்த்தாவே, உம்முடைய மகத்தான பரிசுத்த இரத்தத்தைக் கொண்டு, சபையைப் பரிசுத்தமாக்கி, எல்லா விரிசல்களையும், பலவீனமான எல்லா கறைகளையும் மற்றும் - மற்றும் எல்லா தவறான திருக்காணியின் புரிகளையும் (threads) அகற்றிப்போட வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்களை மறுபடியுமாக அந்த இயந்திரத்தின் வழியாக ஓட்டி, அவர்களை மீண்டும் திறந்தருளும், கர்த்தாவே, அவர்களை பொருளாக ஆக்கியருளும். ஓ நித்திய ஸ்தோத்தரிக்கப்பட்ட பிதாவே, உமது ஊழியக்காரனுடைய ஜெபத்தைக் கேட்டருளும். நாம் நமது தலைகளை வணங்கியிருக்கையில். 156. தேவன் இந்த சோதனையின் நேரங்களில் இருந்து, உங்களுக்கு நியமிக்கப்பட்ட இடத்தில் அவர் உங்களை உண்மையுள்ளவர்களாக ஒருபோதும் காணாமல் இருக்கிறார் என்று உணருகிற அப்படிப்பட்ட ஒரு நபர் இங்கே இன்றிரவு இருப்பாரென்றால். விவாதங்கள் எழும்பும் போது, அல்லது நீங்கள் அதில் குதித்து அதில் பங்கு கொள்கிறவர்களாய் இருக்கிறீர்களா? சண்டைகள் எழும்போதும், அலட்சியப்போக்கு, சபையில் வித்தியாச பேதங்கள் வரும்போதும், சமயக் கோட்பாடுகள் மற்றும் தனிக்குழுக்கள் மற்றும் அதைப் போன்ற அப்படிப்பட்டவைகளின் பக்கம் சேர்ந்து கொள்கிறீர்களா? தெருக்களிலும் அந்த இடங்களைச் சுற்றிலும் வம்புப்பேச்சுகளுக்கு செவிகொடுக்கிறீர்களா? நீங்கள் அதைக் குறித்து குற்றம் உள்ளவர்களாக இருப்பீர்களானால், பிசாசின் விரிசல்களின் மூலமாக அதனூடாக நீங்கள் வெடித்து போய் விட்டிருக்கிறீர்கள், நாம் இன்றிரவு உலைக்களத்திற்குத் திரும்பிச் சென்று, மறுபடியும் உருக்குவிக்கப்பட்டு, நமக்குள்ளே அவைகள் இல்லாமல் வெளியே வருவோம். தேவன் தாமே நம்மை திருக்காணியின் புரியினால் இணைத்து (thread down), இந்த மகத்தான பாலமானது அதனுடைய எடுத்துக்கொள்ளப்படுதலைச் செய்யும்படியாக நம்மை ஆயத்தப்படுத்துவாராக. அப்படிப்பட்ட ஒரு நபர் இங்கே இருந்து, நினைவுகூரப்பட விரும்புவாரானால்! 157. நீங்கள், "சகோதரன் பிரன்ஹாமே, இந்த அழிவில்லாத, நித்திய ஞாபகச் சின்னம் நிலைநிற்கும் என்று நான் எப்படி அறிவேன்?" என்று கேட்கலாம். 158. யோவான் 5:24-ன்படி, நான் அவருடைய வார்த்தையை உங்களுக்கு மேற்கோள் காட்டுவேன். "என் வசனத்தைக் கேட்டு," (என்னுடைய பள்ளிக்கு போங்கள்" என்பதல்ல.) "என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, அவன் ஒருபோதும் நியாயத்தீர்ப்புக்கு உட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்." 159. இன்றிரவு அவருடைய வார்த்தை உங்களை அழைத்துக் கொண்டிருக்கிறது என்பதை உங்களால் கேட்க முடிகிறதா? அதை உங்களால் கேட்க முடிந்து, ஜெபத்தில் நினைவுகூரப்பட விரும்புவீர்களானால், உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா. "சகோதரன் பிரன்ஹாமே, அப்படியே எனக்காக ஜெபியுங்கள். நான் சரியான விதமான மூலப்பொருளாக இருக்க விரும்புகிறேன், கிறிஸ்து தம்முடைய சபையை வெளியே கொண்டுவரும்போது, நான்..." என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. "நான் அதைக் குறித்து நடுங்குகிறவனாய் இருக்க மாட்டேன், அவர் என்னைச் சரியாக சபைக்குள் பொருத்துவார்." வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. "நான்... இருக்க விரும்புகிறேன்." சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. "நான் சரியான விதமான வஸ்துவாக இருக்க விரும்புகிறேன்." அங்கே பின்னாலிருக்கும் சிறியவரே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இங்கேயிருக்கும் என்னுடைய அன்பு சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நான் உண்மையான வஸ்துவாக காணப்பட விரும்புகிறேன். எனக்குள்ளிருக்கிற நம்பிக்கை என்னவென்பதைக் குறித்து என்னால் சாட்சி கூற இயல வேண்டுமென்று விரும்புகிறேன்; அந்த நம்பிக்கை!" சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. அது சரியே. "சகோதரன் பிரன்ஹாமே, என்னுடைய கரங்களை உயர்த்துவதன் மூலமாக, அது என்ன செய்கிறது?" 160. நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டு விட்டீர்கள். அதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். நீங்கள் சரியாக அங்கேயே புவிஈர்ப்பு விசையின் ஒவ்வொரு பிரமாணத்தையும் உடைத்துப் போடுகிறீர்கள். பாருங்கள், நீங்கள் வெறுமனே அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் மெழுகு உருவமாக இருந்தீர்களானால், உங்களால் ஒருபோதும் உங்கள் கரத்தை உயர்த்த முடிந்திருக்காது. உங்களால் அதைச் செய்ய முடிந்திருக்காது. ஆனால் அங்கே ஒரு ஆவி, ஒரு ஆவி உங்களுக்குள் இருக்கிறது என்பதை அது காண்பிக்கப் போகிறது, தேவனுடைய ஆவி உங்களிடம் பேசிக் கொண்டிருந்ததை அந்த ஆவி கேட்டிருக்கிறது. உங்களுக்குள் இருக்கிற அந்த ஆவியானது ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கிறது. எனவே அது விஞ்ஞானத்திற்கு எதிர்த்து நிற்கிறது. அது ஈர்ப்பு விசையை எதிர்த்து நிற்கிறது. அது உயர்த்தப்படுகிறது போது, அங்கே உங்கள் கரத்தை உயர்த்த முடிந்த ஒரு ஆவி உங்களுக்குள்ளேயிருக்கிறது என்பதைக் காண்பிக்கிறது. நீங்கள் மரித்தவர்களாக இருந்திருந்தால், உங்களால் அதைச் செய்ய முடிந்திருக்காது, ஆனால் நீங்கள் ஜீவனுக்குட்பட்டு விட்டீர்கள். ஏதோவொன்று சம்பவித்திருக்கிறது. 161. நீங்கள் பாவத்திலும் மீறுதலிலும் மரித்தவர்களாக இருந்தால், தேவனால் இனியும் உங்களிடம் பேச முடியாது, உங்கள் கரம் கீழேயே இருந்திருக்கும். நீங்கள் பாவத்திலும் மீறுதலிலும் மரித்தவர்களாக இல்லாமல் இருப்பதால், தேவனால் உங்களிடம் பேச முடிந்து, நீங்கள் ஜீவனைப் பெற்றுக்கொள்கிறீர்கள், (அப்போது) நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்துவீர்கள். பாருங்கள், ஜீவனானது ஒரு தீர்மானம் செய்திருக்கிறது என்பதை காண்பிக்கிறது, நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள். நீங்கள் அதை அர்த்தங்கள் கொள்வீர்களானால், "நீங்கள் மரணத்தை விட்டு ஜீவனுக்குட்பட்டு விட்டீர்கள்." 162. இப்பொழுது, உங்கள் கரத்தை நீங்கள் உயர்த்தியிருக்கையில், அதைப் பொருள் கொள்ளுங்கள். "தேவனே, என்மேல் இரக்கமாயிரும், நான் எப்படியிருக்க வேண்டுமோ அப்படியே என்னை ஆக்கும். நான் என்னுடைய ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மைச் சேவிப்பேன். நான் அந்த நாளுக்காக ஆயத்தப்பட்டவனாக காண விரும்புகிறேன்" என்று கூறுங்கள். அங்கே பின்னாலிருக்கும் அன்பு சகோதரனே, உன்மேல் ஆசீர்வாதம் (வருவதாக.) வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அங்கேயிருக்கும் சகோ... தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களோடு கூட இருப்பாராக. தேனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சரி, வேறு யாராவது. இங்கேயிருக்கும் சகோதரன் ராய், தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, கர்த்தர் உம்மோடு கூட இருப்பாராக ஆமாம். கர்த்தாவே, என்னைப் பாத்திரவானாக கண்டருளும். என்னைப் பாத்திரவானாகக் கண்டருளும்." பின்னாலிருக்கும் எனது சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நிச்சயமாகவே, தேவன் உங்களைக் காண்கிறார். சந்தோஷமாயிருங்கள். இப்பொழுது வேறு யாராவது ஜெபத்தில் நினைவுகூரப்பட விரும்புகிறீர்களா? - என்னை ஆக்கியருளும் சரி. நாம்.... 2